தினமும் இரவில் தூங்குவதற்கு முன்பு ஏலக்காய் பால் குடித்து பாருங்க.! இதில் உள்ள நன்மைகள் என்ன தெரியுமா.!?
பொதுவாக தினமும் இரவில் தூங்குவதற்கு முன்பாக பால் குடித்து விட்டு தூங்க வேண்டும் என்று பலரும் கூறுவதை கேள்விப்பட்டிருப்போம். பாலில் ஏலக்காய் கலந்து குடிக்கும் போது உடலில் பலவிதமான நன்மைகள் ஏற்படுகின்றன. உடலை புத்துணர்ச்சியாகவும், உடலுக்கு தேவையான ஆற்றலை தரும் ஏலக்காயை பாலில் கலந்து குடிக்கும் போது என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை குறித்து பதிவில் பார்க்கலாம்?
1. தூக்கமின்மை பிரச்சனையால் அவதியுருபவர்களுக்கு ஏலக்காய் பால் சிறந்த தீர்வாக இருந்து வருகிறது.
2. மனப்பதட்டம், மனச்சோர்வு பிரச்சினை உள்ளவர்கள் ஏலக்காய் பால் குடிப்பதன் மூலம் மனதை அமைதிப்படுத்தும்.
3. ஏலக்காயில் உள்ள ஆக்சிஜனேற்ற பண்புகள் மற்றும் டையூரிடிக் அமிலங்கள் உயர் ரத்த அழுத்தத்தை சரி செய்யும்.
4. வாய் துர்நாற்றம், வாயில் புண் போன்ற தொல்லைகள் இருந்தால் ஏலக்காயை வாயில் போட்டு மென்று வந்தால் பிரச்சனை குணமாகும்.
4. வறட்டு இருமல் இருக்கும் நேரத்தில் ஏலக்காயின் தோல்களை பிரித்து விட்டு விதைகளை வாயில் போட்டு மென்று வர இருமல் இருந்த இடம் தெரியாமல் ஓடிப் போகும்.
5. மகிழ்ச்சியை அதிகரிக்கும் செரடோனின் ஹார்மோன், ஏலக்காய் பால் குடிப்பதன் மூலம் உடலில் இருந்து வெளியாகிறது. இதனால் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்க செய்கிறது.
6. ஒரு சிலருக்கு என்னதான் 8 மணி நேரம் தூங்கி எழுந்தாலும் உடல் சோர்வாகவே இருக்கும். இத்தகையவர்கள் ஏலக்காய் பால் குடிப்பதன் மூலம் உடல் சோர்வில் இருந்து விடுபடலாம்.
7. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் ஏலக்காயை தண்ணீரில் கொதிக்க வைத்த குடித்து வரலாம். இதன் மூலம் அஜீரணம், நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளும் குணமாகும்.
8. உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை கரைத்து இதயத்திற்கு செல்லும் நரம்புகளின்செயல்பாட்டை சரி செய்து, ரத்தத்தை சீராக இதயத்திற்கு கொண்டு செல்ல உதவுகிறது.
9. ஏலக்காயில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் இதை பொடி செய்து பாலில் போட்டு தினமும் காலை அல்லது இரவில் குடித்து வர மலச்சிக்கல் பிரச்சனை முற்றிலுமாக குணமாகும். இவ்வாறு பல்வேறு நன்மைகளையுடைய ஏலக்காயை பாலில் கலந்து குடித்து நல்ல பலன் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.