உடல் எடையை ஒரே வாரத்தில் குறைக்கும் மோர் கற்றாழை.! எப்படி செய்யலாம்.!?
பொதுவாக தெருக்களில் சாதாரணமாக வளர்ந்து நிற்கும் கற்றாழையில் உடலுக்கு நன்மைகளை தரும் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் இருந்து வருகின்றன. ஆனால் இதை எப்படி பயன்படுத்துவது என்பது பலருக்கும் தெரிவதில்லை. மேலும் சோற்றுக் கற்றாழையில் மோர் கலந்து குடித்து வந்தால் உடலில் பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும். அவை என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம்.?
சோற்றுக் கற்றாழையில் மோர் கலந்து ஜூஸாக குடித்து வந்தால் உடல் எடை குறையும், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சனை, அல்சர், செரிமான பிரச்சனை, பெண்களுக்கு கர்ப்பப்பை கோளாறுகள் மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வலி போன்ற பல்வேறு பிரச்சனைகளை சரி செய்யும்.
கற்றாழை மோர் செய்முறை: புளிக்காத தயிர் - 1/2 கப், கற்றாழை - 4 துண்டுகள், இஞ்சி - சிறு துண்டு, பெருங்காய தூள் - சிறிதளவு, கொத்தமல்லித் தழை, உப்பு - தேவையான அளவு
முதலில் கற்றாழையை தோல் நீக்கி நன்றாக அலசி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு மிக்சியில் இஞ்சி துண்டு மற்றும் கற்றாழைகளை சேர்த்து நன்றாக அரைத்து பின்னர் புளிக்காத தயிர், பெருங்காயத்தூள் உப்பு போன்றவற்றை சேர்த்து அரைத்து டம்ளரில் ஊற்றி பரிமாற வேண்டும். இதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு கரைந்து உடல் எடை ஒரே வாரத்தில் குறையும். மேலும் நீண்ட நேரம் பசி எடுக்காது என்பதால் உடல் எடை மீண்டும் அதிகரிக்கவும் செய்யாது.