முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பிரபலங்கள் குடிக்கும் இந்த பிளாக் வாட்டரின் ரகசியம் என்ன தெரியுமா.!?

07:28 AM Feb 11, 2024 IST | 1newsnationuser5
Advertisement

பொதுவாக பிரபலங்கள் பலரும் தண்ணீருக்கு பதிலாக ஒரு வகையான கருப்பு நிற பானத்தை குடித்து வருகின்றனர். குறிப்பாக கிரிக்கெட் விளையாட்டு வீரர் விராட்கோலி இந்த கருப்பு நிற தண்ணீரை குடிப்பதை பலரும் பார்த்திருப்போம். பல பிரபலங்களுக்கு வயது 40 தாண்டினாலும் இளமையாக இருப்பதற்கும், ஆரோக்கியமாக இருப்பதற்கும் இந்த கருப்பு நிற தண்ணீர் காரணம் என்று கூறப்பட்டு வருகிறது.

Advertisement

தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் நிறைந்த இந்த கருப்பு நிற தண்ணீரை கார நீர் என்றும் அழைத்து வருகின்றனர். சாதாரண தண்ணீர் P H அளவு 7 இருக்கும். ஆனால் இதில் pH அளவு சாதாரண தண்ணீரின் அளவைவிட அதிகமாக உள்ளது. இந்த கார நீர் உடலில் இருந்து எளிதில் தண்ணீரை வற்ற விடாது. எப்போதும் இளமையாக இருக்கும் தோற்றத்தை தருகிறது என்று சுகாதார நிபுணர்களும் கூறி வருகின்றனர்.

குடலிலிருந்து நச்சுக்களை நீக்கி உடலை சுறுசுறுப்பாகவும், தோலில் நச்சுகளை நீக்கி இளமையாகவும் பாதுகாக்கிறது. உடலில் PH அளவை சமப்படுத்தி வயிற்றில் உள்ள அமிலத்தை சீராக்குகிறது. இந்த கருப்பு நிற நீரில் ஃபுல்விக் என்ற அமிலம் உள்ளதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.

மேலும் பெண்களுக்கு மலட்டு தன்மையை சரி செய்கிறது. கர்ப்பப்பை புற்றுநோய், கர்ப்பப்பையில் புண் போன்றவற்றையும் சரி செய்கிறது. அதிகமான வெயிலில் நம் உடல் ஊட்டச்சத்துக்களை வேகமாக உறிஞ்சுவதை தடுக்கிறது. இது போன்ற பல்வேறு நன்மையுடைய கார நீர் என்று அழைக்கப்படும் கருப்பு நிற நீரின் விலை 3000முதல் 4000 ரூபாய் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Black WaterhealthyLifestyle
Advertisement
Next Article