Banana Stem: நீரிழிவு நோய் முதல் சிறுநீரக கல் வரை..! நோய்களை தீர்க்கும் வாழைத்தண்டு.? எப்படி பயன்படுத்தலாம்.!
Banana Stem: பொதுவாக வாழை மரத்தில் கிடைக்கும் அனைத்து பொருட்களும் உணவாகவும், மருந்தாகவும் பயன்பட்டு வருகிறது. வாழைத்தண்டு, வாழைப்பூ, வாழைக்காய், வாழை இலை, வாழைப்பழம் என அனைத்துமே ஊட்டச்சத்து மிகுந்தவையாக இருக்கிறது. இதனை உணவாக எடுத்துக் கொள்ளும்போது நம் உடலில் பலவகையான நோய் தாக்கம் ஏற்படுவதை தடுக்கிறது.
குறிப்பாக வாழை மரத்திலிருந்து கிடைக்கும் வாழைத்தண்டு பல வகையான நோய்களை குணப்படுத்துகிறது என்று மருத்துவர்களும் அறிவுறுத்திவுள்ளனர். அந்த வகையில் பெரும்பாலும் தென்னிந்தியா பகுதியில் வாழைத்தண்டு உணவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாழைத்தண்டை பொரியல், ஜூஸ், சூப் என பல வகைகளில் சமைத்து சாப்பிட்டு வருகின்றனர். இதில் வாழைத்தண்டை சாறாக குடிப்பதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை குறித்து பார்க்கலாம்.
வாழைத்தண்டு சாறில் கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் பி6, மெக்னீசியம் போன்ற பல்வேறு வகையான சத்துக்கள் இருப்பதால் உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை தருகிறது. உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. குடலில் உள்ள நச்சுக்களை போக்கி செரிமான மண்டலத்தை சரிப்படுத்துகிறது.
மேலும் வாழைத்தண்டில் உள்ள பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி6 சத்துக்கள் உடலில் உள்ள சோடியத்தின் அளவை கட்டுப்படுத்தி உயர் இரத்த அழுத்த பிரச்சனையை குறைக்கிறது. சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்கள் மற்றும் கற்களை வெளியேற்றி சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமலும் தடுக்கிறது. இவ்வாறு பல்வேறு நன்மைகளையுடைய வாழைத்தண்டை சாறாக 7 முதல் 14 நாட்கள் வரை தொடர்ந்து குடித்து வந்தால் உடலில் ஏற்படும் நோய்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும்.
English summary : Drinking banana stem juice for 14 days prevents diseases
Read more : புற்றுநோயை தடுக்கும் கொடுக்காப்புளி.! இதில் இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதா.!?