சாப்பிட்ட பின் வெற்றிலையை மெல்லுவதால் கிடைக்கும் நன்மைகள்..!! அடடே இந்த பிரச்சனைக்கும் தீர்வா..?
வெற்றிலைகள் நம்முடைய இந்திய கலாச்சாரத்தில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தை கொண்டுள்ளன. ஆன்மீக விழாக்கள், சடங்குகள், பூஜைகள் முதல் திருமணம் வரை பல மங்களகரமான நிகழ்வுகளில் முக்கிய ஒன்றாக வெற்றிலை இருக்கிறது. உண்மையில் ஆயுர்வேதத்தின்படி வெற்றிலைகள் மருத்துவ குணங்கள் நிறைந்தவை மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளை நமக்கு வழங்க கூடியவை என்ற உண்மை பலருக்கும் தெரிவதில்லை.
தினசரி சாப்பிட்டு முடித்த பின் வெற்றிலை மெல்லுவதால் கிடைக்கும் நன்மைகள் :
* வெற்றிலைகளில் செரிமான நொதிகளின் (digestive enzymes) உற்பத்தியை அதிகரிக்கும் காமபவுண்ட்ஸ் உள்ளன. இது உணவை மிக சிறப்பாக உடைக்க உதவுகிறது. வயிற்று உப்புசம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
* வெற்றிலையில் உள்ள இயற்கையான சில கலவைகள் நம்முடைய மனதிலும், உடலிலும் அமைதியான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. ரிலாக்ஸை ஊக்குவித்து மன அழுத்தம் குறைய உதவுகின்றன மற்றும் நன்றாக தூங்க உதவுகின்றன.
* தினசரி வெற்றிலையை எடுத்து கொள்வது வளர்சிதை மாற்ற செயல்முறையைத் தூண்டும். இது உணவை மிகவும் திறம்படச் செயலாக்க உடலுக்கு உதவுவதோடு, எடை மேலாண்மைக்கு உதவும்.
* வெற்றிலையில் ஏலக்காய் மற்றும் கிராம்பு போன்ற கூடுதல் பொருட்களுடன் இணைந்து இது வலிக்கு அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது மற்றும் வாய் துர்நாற்றத்தை குறைக்க உதவுகிறது. வாய் மற்றும் சுவாசத்தை ஃபிரெஷ்ஷாக வைத்து கொள்ள வெற்றிலை உதவும்.
* வெற்றிலை வாய்வழி தொற்று ஏற்படும் அபாயத்தை குறைக்கவும், சுவாசத்தை புத்துணர்ச்சியாக வைக்கவும் உதவும். வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் உமிழ்நீர் உற்பத்தி அதிகரிக்கிறது. இது இயற்கையாகவே உங்கள் வாயை சுத்தப்படுத்துகிறது மற்றும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உருவாவதை தடுக்கிறது.
Read More : விவசாயிகளுக்கு குட் நியூஸ்..!! நெல் கொள்முதலுக்கான ஊக்கத் தொகை உயர்வு..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு..!!