சகல நோய்களுக்கும் தீர்வை தரும் கருஞ்சீரக எண்ணெய்.! எப்படி உபயோகபடுத்தலாம்.!
09:26 PM Feb 03, 2024 IST | 1newsnationuser5
Advertisement
பொதுவாக கருஞ்சீரக எண்ணெய் என்பது அனைத்து வகையான நோய்களை தீர்க்கும் மருத்துவ குணம் நிறைந்தது. அந்த காலத்தில் பெரியவர்கள் உணவுகளில் அடிக்கடி கருஞ்சீரகத்தை பயன்படுத்தி வந்தார்கள். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தலை முதல் கால் வரை ஏற்படும் பல்வேறு வகையான பாதிப்புகளையும் குணப்படுத்தும் தன்மை கருஞ்சீரகத்திற்கு உண்டு. அந்த வகையில் கருஞ்சீரகத்திலிருந்து தயாரிக்கப்படும் எண்ணையிலும் பல்வேறு நன்மைகள் இருக்கின்றன. இந்த எண்ணெயை எப்படி உபயோகப்படுத்தலாம் என்பதை குறித்து பார்க்கலாம்.
Advertisement
- பொதுவாக கருஞ்சீரக எண்ணெயில் அலர்ஜி எதிர்ப்பு பண்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்பு அதிகமாக காணப்படுவதால் இது நம் உடலில் உள்ள தோலில் ஏற்படும் அலர்ஜி, அரிப்பு, சரும வறட்சி, சொரியாசிஸ், பருக்கள், தழும்புகள் போன்ற பிரச்சனைகளை குணப்படுத்துகிறது. இந்த எண்ணெய்யை நேரடியாக சருமத்தில் தேய்த்து பயன்படலாம்.
- கருஞ்சீரகத்தில் தைமோகுவினோன் என்ற வேதிப்பொருள் அதிகமாக உள்ளதால் இது நீண்ட நாட்களாக ஆறாத காயங்கள், வெட்டு காயங்கள், புண்கள் போன்றவற்றை எளிதாக சரி செய்யும்.
- சர்க்கரை நோயாளிகளுக்கு உடலில் அடிபட்டு புண்கள் ஏற்பட்டால் விரைவில் ஆறாது. அத்தகையவர்கள் இந்த கருஞ்சீரக எண்ணெய்யை உபயோகப்படுத்தலாம்.
- வாரத்திற்கு 2 முறை தலையில் கருஞ்சீரக எண்ணெய் தேய்த்து வந்தால் தலைமுடி உதிர்தல், பொடுகு, தலை வறட்சி போன்ற பிரச்சனைகள் குறைந்து முடி அடர்த்தியாக வளர உதவி செய்யும்.
- நீரிழிவு நோய் உள்ளவர்கள் கருஞ்சீரக எண்ணெய்யை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி நோயின் தீவிரத்தை குறைக்கிறது.
- உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து உடல் எடையை வேகமாக குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது கருஞ்சீரக எண்ணெய்.
- கருஞ்சீரக எண்ணெய் உடலில் புற்று நோய் ஏற்படுத்தும் செல்களின் வளர்ச்சியை தடுத்து முற்றிலுமாக அளிக்கிறது.
- கருஞ்சீரக எண்ணெயில் உள்ள ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி பண்புகள் சுவாச பாதையில் ஏற்படும் தொற்றுக்களை அளித்து ஆஸ்துமா மற்றும் நுரையீரல் பிரச்சனை உள்ளவர்களுக்கு தீர்வைத் தரும். கருஞ்சீரக எண்ணெய் கேப்ஸ்யூல்களாகவும் விற்கப்படுவதால் நுரையீரல் பிரச்சினை உள்ளவர்கள் இதை வாங்கி பயன்படுத்தலாம். இவ்வாறு கருஞ்சீரக எண்ணெய் முடி உதிர்தலில் இருந்து புற்றுநோய் வரை பல்வேறு நோய்களை குணப்படுத்தி உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. இதனாலேயே நம் முன்னோர்கள் கருஞ்சீரகத்தை அடிக்கடி உணவில் எடுத்துக் கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.