For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் தொப்புள்..!! இந்த மாற்றங்களை கவனிக்காம விட்றாதீங்க..!!

Many people do not know that the navel area can tell about our health.
07:41 AM Jun 05, 2024 IST | Chella
புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் தொப்புள்     இந்த மாற்றங்களை கவனிக்காம விட்றாதீங்க
Advertisement

தொப்புள் பகுதி என்பது நமது உடல் ஆரோக்கியத்தை பற்றி சொல்லக்கூடியது என்பது பலருக்கு தெரிவதில்லை. ஒரு சிலருக்கு தொப்புளை பார்த்தால் ஒருவித பயம் ஏற்படும். இது ஆம்ஃபலோபோபியா (omphalophobia) என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியை பலர் தற்போது அழகுப்படுத்தி அதில் வளையங்கள் மாற்றுவது போன்ற செயல்களை செய்து வருகின்றனர். எதுவாக இருந்தாலும் சரி, ஒரு சமயத்தில் இந்த தொப்புள் பகுதி தான் நம்மை நமது தாயுடன் இணைத்து வைத்திருந்தது. தாய் மற்றும் சேய் இடையே இனம் புரியாத ஒரு பந்தத்தை உருவாக்கியதே இந்த தொப்புள் கொடி தான்.

Advertisement

தாயிலிருந்து ரத்தத்தை கருவுக்கு கொண்டு செல்லும் ரத்த நாளங்களுக்கான ஒரு ஆணுகல் புள்ளியாக இந்த தொப்புள் கொடி அமைகிறது. தொப்புள் கொடியை சுற்றி அமைந்திருக்கும் இணைப்பு திசுக்கள் அதனை பாதுகாக்க உதவுகிறது. பொதுவாக தொப்புள் கொடியில் 3 ரத்தநாளங்கள் இருக்கும். ஒன்று ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை கருவுக்கு கொண்டு செல்லும் தொப்புள் கொடி நரம்பு. மேலும், ஆக்சிஜன் நீக்கப்பட்ட ரத்தம் மற்றும் கழிவு பொருட்களை வெளியேற்றும் இரண்டு தொப்புள் கொடி தமனிகளும் உள்ளன.

குழந்தை பிறந்த பிறகு இது எதுவும் தேவையில்லை என்பதால் இந்த தொப்புள் கொடி நாளங்கள் இயற்கையாகவே மூடிவிடும். எனினும் குழந்தை பிறந்து குறிப்பிட்ட நாட்கள் வரை மருந்துகளை உட்செலுத்த அல்லது சோதனைகளுக்காக ரத்த மாதிரிகள் எடுப்பதற்கு மருத்துவர்கள் இதனை பயன்படுத்துவார்கள். தொப்புள்கொடி என்பது ஒரு அணுகல் புள்ளியாக மட்டுமின்றி, பல்வேறு நோய்களை கண்டறிவதற்கான இடமாகவும் அமைகிறது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அடி வயிறு மற்றும் இடுப்பு குழி பகுதியில் உண்டாக்கக்கூடிய புற்றுநோய்கள் தீவிரநிலையை அடைந்த பிறகு, மிகவும் தாமதமாக கண்டறியப்பட்டு வந்தது.

இதனால் அதற்கான சிகிச்சை வழங்குவது மிகவும் சவாலாக இருந்தது. பொதுவாக இந்த வகையான புற்றுநோய் ஒரு உறுப்பு அல்லது ஒரு பகுதியில் ஆரம்பித்து அந்த இடத்தில் இருந்து மற்ற இடத்திற்கு பரவுகிறது. இது மெட்டாஸ்டாட்டிஸ் என்று அழைக்கப்படுகிறது. ஆனால், மெட்டாஸ்டாட்டிக் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களின் தொப்புள்கொடியில் வீக்கம் ஏற்படுவது பின்பு கண்டறியப்பட்டது. இது புற்றுநோயை கண்டறிவதற்கான ஒரு முக்கிய அறிகுறியாக இது அமைந்தது.

அந்த காலத்தில் புற்றுநோயை கண்டுபிடிப்பதற்கு இது உதவியாக அமைந்தது. ஆனால், தற்போது இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே புற்றுநோயை கண்டறிவதற்கான ஏராளமான நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, தொப்புள் கொடி என்பது நமது உடலுக்குள் ஏற்படும் ஒரு சில உடல்நல கோளாறுகளை கண்டறிவதற்கான ஒரு முக்கியமான பகுதியாக அமைகிறது. உங்களுடைய தொப்புளில் ஏதேனும் மாற்றங்களை கவனிக்கும் பட்சத்தில் உடனடியாக அது குறித்து மருத்துவரிடம் ஆலோசிப்பது அவசியம்.

Read More : தமிழ்நாட்டில் அதிக வாக்குகள் பெற்ற பாஜக வேட்பாளர்கள் யார்..? அட இவரு தான் டாப்..!!

Tags :
Advertisement