வருஷத்துல எல்லா நாளுமே இங்கு மழை தான்..!! விசித்திர நகரத்தின் பின்னணி என்ன?
மழைக்காலம், வெயில் காலம், குளிர் காலம் என உலகில் உள்ள எல்லா ஊர்களும் தனக்கென தனி காலநிலையை கொண்டிருக்கும். ஒரு சில மாதங்கள் வெயில் அடித்தால் அடுத்த சில மாதங்கள் மழை பொழியும் என்பதுதான் இயற்கை. ஆனால் ஒரு நகரத்தில் மட்டும் தினம்தோறும் ஒரே நேரத்தில் மழை பொழியும் என்றால் உங்களால் நம்ப முடியும்.
அந்த அதிசய நகரம் தான் பெலேம். பெலேம் சிறிய தீவு ஒன்றில் அமைந்துள்ளது. இது பிரேசிலின் பரபரப்பான துறைமுகங்களில் ஒன்றாகும். இங்கு தினமும் மதியம் 2 மணிக்கு மேல் மழை பொழிய தொடங்கிவிடுமாம். 1616 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பெலேம், மில்லியன் கணக்கான மக்களை கொண்ட ஒரு பெரிய நகரமாகும்.
உலகின் மிகவும் பிரபலமான மழைக்காடுகளில் அமைத்துள்ள பெலேமில் ஒவ்வொரு நாளும் மழை பொழிகிறது. பெலேமில் தினமும் 2 மணிக்குமழை பொழியும். ஆனால் காலநிலை மாற்றம் இந்த நகரத்தின் அன்றாட வாழ்க்கையை மாற்றியுள்ளது. இங்கு தொடர்ந்து பொழியும் மழை காரணமாக கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு நகரம் முழுவதும் தண்ணீர் தேங்குகிறது. வளமான வரலாறு, வியப்பூட்டும் கலாச்சாரம், பிரமிக்க வைக்கும் இயற்கை அழகு ஆகியவற்றுடன், பெலேம் விருந்தினர்களுக்கு உண்மையிலேயே தனித்துவமான அனுபவத்தை வழங்கும் என்பதில் மாற்று கருத்தே இல்லை.
Read more ; கன்னியாகுமரிக்கு டூர் போறீங்களா? இந்த இடத்தை மிஸ் பண்ணிடாதீங்க..!! அப்டி என்ன சுவாரஸ்யம்?