For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

உஷார்!. அறை ஹீட்டரில் இருந்து வெளியேறிய புகை!. மூச்சுத் திணறலால் மொத்த குடும்பமும் பலியான சோகம்!.

Be careful! Smoke from the room heater!. The whole family died due to suffocation.
08:03 AM Jan 07, 2025 IST | Kokila
உஷார்   அறை ஹீட்டரில் இருந்து வெளியேறிய புகை   மூச்சுத் திணறலால் மொத்த குடும்பமும் பலியான சோகம்
Advertisement

Room heater: ஜம்மு காஷ்மீரில் குளிரை சமாளிக்க போட்டப்பட்ட அறை ஹீட்டரில் இருந்து வெளியேறிய புகையால் ஒருமாத குழந்தை உட்பட 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ஷேக் மொஹல்லா, பண்டரேதன் பகுதியை சேர்ந்தவர் அஜாஸ் அகமது பட்(38). இவரது மனைவி மனைவி சலிமா(32). இவர்களுக்கு ஆரிப் (3), ஹம்சா(18 மாத குழந்தை) மற்றும் ஒரு மாத குழந்தை உள்ளனர். வாடகை வீட்டில் வசித்து வரும் இவர், கடுமையான குளிரை சமாளிக்க அறை ஹீட்டரை போட்டுவிட்டு தூங்க சென்றுள்ளனர். காலையில் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கதினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கதவை திறந்துபார்த்தபோது 3 குழந்தைகள் உட்பட 5 பேரும் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இவர்களது பிரேத பரிசோதனை அறிக்கையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.ஹீட்டர்களில் இருந்து வெளியேறிய கார்பன் மோனாக்சைடு தான் இவர்களின் மரணத்திற்கு காரணம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு முதல்வர் ஒமர் அப்துல்லா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் குளிர்காலங்களில் ஹீட்டர்களை பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

குளிர் காலங்களில் எல்.பி.ஜி., ஹீட்டர்களை பயன்படுத்தும் போது, அதில் இருந்து கார்பன் மோனாக்சைடு வெளியேறும். அந்த சமயம் காற்று உட்புகாதபடி, கதவு, ஜன்னல்கள் அடைக்கப்பட்டிருப்பது விபரீதத்தை ஏற்படுத்தும். எனவே, காஸ் ஹீட்டர்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Readmore: 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!! உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்த மக்கள்..!! நேபாளத்தில் பயங்கரம்..!!

Tags :
Advertisement