முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

உஷார்..!! தமிழில் பெயர் பலகை..!! இனி கட்டாயம் அபராதம் தான்..!! எவ்வளவு தெரியுமா..?

It is mandatory for all business establishments to set up their name board in Tamil. A fine of Rs 2,000 has been imposed on business owners who fail to do so
03:55 PM Jul 20, 2024 IST | Chella
Advertisement

வணிக நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழைப் பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என்றும் அனைத்து பொது இடங்களிலும் பெயர் பலகைகள் தமிழ் மொழியில் எழுதப்பட வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில், தமிழில் பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி ஐகோர்ட் கிளையில் கடந்த ஆண்டு தொடரப்பட்ட வழக்கில், வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என அரசு அறிவித்தது. தற்போது அந்த சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், “புதிய சட்ட திருத்தப்படி, 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் வணிக நிறுவனங்கள், இணையதளத்தில் பதிவு செய்து பதிவு சான்று பெறுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து வணிக நிறுவனங்களும், தங்களது பெயர் பலகையை தமிழில் அமைப்பது கட்டாயம் ஆகும். அவ்வாறு அமைக்காத வணிக நிறுவன உரிமையாளர்களுக்கு 2,000 ரூபாய் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளனர்.

Read More : வினாத்தாள் கசிந்த மையங்களில் 100-க்கும் மேற்பட்டோர் 600க்கு மேல் மதிப்பெண்..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!

Tags :
உயர்நீதிமன்ற கிளைதமிழ்பெயர் பலகைவணிக நிறுவனங்கள்
Advertisement
Next Article