உஷார்!. உங்க அக்கவுண்டிற்கு பணம் அனுப்பி!. புதுவித மோசடியில் இறங்கிய கும்பல்!. சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை!
Cyber crime police: ஒருவரது அக்கவுண்டிற்கு தவறுதலாக பணம் அனுப்பி புதுவித சைபர் மோசடி செய்துவருவதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது, 'ஆன்லைன்' வாயிலாக பணமோசடி செய்யும் சைபர் குற்றவாளிகள், தற்போது, புதிய உத்தியை கையாண்டு வருகின்றனர். அவர்கள், பொது மக்களுக்கு, 'கூகுள் பே' வாயிலாக, 1,500 - 2,000 ரூபாய் வரை அனுப்புகின்றனர். பிறகு பணம் அனுப்பப்பட்ட நபரை தொடர்பு கொண்டு, நான் மாற்றுத்திறனாளியான குழந்தையை, மருத்துவமனையில் சேர்த்துள்ளேன். உங்களுக்கு தவறுதலாக பணம் அனுப்பி விட்டேன்.
அந்த பணத்தை நான் கூறும், மொபைல் எண்ணிற்கு அனுப்புங்கள் அல்லது 'கியூ.ஆர்., கோடு' அனுப்புகிறேன். அதை, 'ஸ்கேன்' செய்து அனுப்புங்கள் என்று கூறுகின்றனர். அவர்களிடம், நான் காவல் நிலையத்தில் பணத்தை ஒப்படைத்து விடுகிறேன். உங்களுக்கு என்னால் அனுப்ப முடியாது என்று கூறி விடுங்கள். இத்தகைய சைபர் குற்றவாளிகள், உங்களின் வங்கி கணக்கு உள்ளிட்ட விபரங்களை திருடி, பணத்தை மோசடி செய்ய முயற்சிக்கின்றனர். இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த மோசடி முயற்சி குறித்து, கட்டணமில்லா, 1930 என்ற எண்ணிலும், www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் அளியுங்கள்.
Readmore: “எங்களை நம்பி வருவோருக்கு நிச்சயம் இது கிடைக்கும்”..!! கூட்டணிக்கு அழைப்பு விடுத்த விஜய்..!!