உஷார்!. பட்டாசுகளால் ஏற்படும் காற்று மாசுபாடு!. சுவாச பிரச்சனை அபாயம்!. பாதுகாப்பது முன்னெச்சரிக்கை டிப்ஸ் இதோ!
Air pollution: தீபாவளி பண்டிகையை மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகளை பரிமாறியும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசுபாடு ஏற்படும் அபாயம் உள்ளது.தீபாவளியன்று வெடிக்கப்படும் பட்டாசுகள் PM10 மற்றும் PM2.5, சல்ஃபர் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைட்ஸ், கார்பன் மோனாக்சைடு மற்றும் மெட்டல் துகள்களை வெளியிடுவதன் மூலம் காற்று மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. பட்டாசுகளில் இருந்து வெளிவரும் இதுபோன்ற உமிழ்வுகள் தீபாவளி கொண்டாட்டங்களுக்கு பிறகும் கூட வளிமண்டலத்தில் நீண்ட நாட்கள் தேங்கி காற்றின் தரத்தையும் மற்றும் நம்முடைய ஆரோக்கியத்தையும் பாதிக்கும் என்ற அதிர்ச்சி தகவல் பலருக்கும் தெரியாத ஒன்று.
ஆஸ்துமா பாதிப்புள்ளவர்களுக்கு மாசுபடுத்திகள் (Pollutants) மூச்சுக்குழாய் பிடிப்பு அல்லது மூச்சுக்குழாய் அழற்சியைத் தூண்டலாம். இது வீஸிங், இருமல் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வழிவகுக்கும். தீபாவளி போன்ற சமயங்களில் ஆஸ்துமா நோயாளிகள் தாங்கள் எடுத்து கொள்ளும் வழக்கமான மருந்துகளின் செயல்திறன் குறைந்ததை போல் உணரலாம். எனவே இவர்கள் சூழலுக்கு ஏற்ப சிகிச்சையில் மாற்றங்களை செய்து கொள்ள தேவை ஏற்பட கூடும்.
சிஓபிடி (COPD) நிலைமை உள்ளவர்களுக்கு, மாசுபடுத்திகளின் அதீத வெளிப்பாடு இருமல் மற்றும் சளி உள்ளிட்ட அறிகுறிகளை மோசமாக்கும். மேலும் நுரையீரல் செயல்பாடு குறைவதற்கு கூட வாய்ப்புண்டு. இந்த நிலையை சரியாக நிர்வகிக்காவிட்டால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழல் உருவாகலாம். ILD (Interstitial Lung Disease) : ஃபைப்ரோடிக் நுரையீரல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மாசுபடுத்திகளால் ஏற்படும் அழற்சியின் காரணமாக அறிகுறி மோசமடைந்து, நுரையீரல் திசு சேதம் மற்றும் ஃபைப்ரோஸிஸ் பாதிப்பு துரிதமாகலாம்.
பட்டாசுகள் ஏற்படுத்தும் காற்று மாசுபாட்டால் ஆரோக்கியமான நபர்களுக்கு ஏற்படும் பொதுவான அறிகுறிகளில் இருமல், தொண்டை எரிச்சல் மற்றும் sinus congestion உள்ளிட்டவை அடங்கும், சிலருக்கு கண் எரிச்சல் மற்றும் தொண்டை வறட்சி பாதிப்புகளும் ஏற்படும். நுண்ணிய துகள்கள் மற்றும் நச்சு வாயுக்கள் தற்காலிகமாக நுரையீரல் செயல்பாடுகளில் குறைபாட்டை ஏற்படுத்தி அது இறுதியில் மூச்சு திணல் ஏற்பட வழிவகுக்கும். பட்டாசுகளால் ஏற்படும் காற்று மாசுபாட்டிற்கு நீண்ட நேரம் வெளிப்படுவது சிலருக்கு மூச்சுக்குழாய் அழற்சி போன்ற நீண்டகால சுவாச பாதிப்புகளின் வளர்ச்சிக்கு பங்களிக்க கூடும் அல்லது எளிதில் பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு ஆஸ்துமா நிலையை தூண்ட கூடும்.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: தனிநபர்கள் பலர் சேர்ந்து நிறைய பட்டாசுகளை வெடிப்பதற்கு பதிலாக ஒரு நிகழ்வாக ஏற்பாடு செய்து பொதுவாக வாணவேடிக்கை அல்லது பட்டாசுகளை வெடிக்கும் firework displays ஈவன்ட்ஸ்களை நடத்துவது காற்று மாசுபாட்டின் அளவை கட்டுப்படுத்த உதவும். மாஸ்க் பயன்படுத்துவதன் மூலம் மாசுபடுத்திகளை சுவாசிப்பதை கணிசமாகக் குறைக்கலாம். அதே போல அதிகஅளவு பட்டாசுகள் வெடிக்கப்படும் பீக் நேரங்களில் வீட்டுக்குள்ளேயே இருப்பதும் ஜன்னல்களை மூடி வைத்திருப்பதும் கூட உதவும்.
HEPA- ஃபில்ட்டர்ட் ஏர் ப்யூரிஃபையர்களை பயன்படுத்துவதால் உட்புற மாசு அளவை குறைத்து, வீடுகளுக்குள் காற்றின் தரத்தை மேம்படுத்தலாம். அதே போல ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்த உணவுகள் மற்றும் உடலை ஹைட்ரேட்டாக வைத்திருப்பது உடலின் இயற்கையான நச்சுத்தன்மை நீக்கும் செயல்முறைகளுக்கு ஆதரவளித்து, மாசுபாட்டினால் ஏற்படும் சில விளைவுகளை தணிக்கும்.
Readmore: அமெரிக்காவில் களைகட்டும் தீபாவளி!. முதல் முறையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அசத்தல்!