வட்டியை உயர்த்திய வங்கிகள்..!! எவ்வளவு தெரியுமா..? வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!!
பொதுமக்களின் தேவையை பொறுத்து தனி நபர் கடன், வீட்டுக் கடன், கல்விக் கடன் உள்ளிட்ட கடன்களை வங்கிகள் வழங்கி வருகின்றன. இதன் மூலம் பலரது கனவுகள் நிறைவடைந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், தற்போது அதிர்ச்சியளிக்கும் வகையில் ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
செப்டெம்பர் மாதம் முதல் பல வங்கிகளின் வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எஸ்.பி.ஐ. எம்சிஎல்ஆர்-அடிப்படையிலான விகிதங்கள் 8.20% முதல் 9.1% வரை உயர்த்தப்பட்டுள்ளது. பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் 3 மாத காலத்தைத் தவிர எந்த கடன் விகிதத்தையும் வங்கி மாற்றி அமைக்கவில்லை. ஒரே இரவி விகிதத்தை வங்கி 9.10% ஆகவும், ஒரு மாதத்திற்கு 9.15% ஆகவும் மாற்றியுள்ளது.
PNB வங்கி சில தவணைகளில் கடன் விகிதங்களை 5 பிபிஎஸ் உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. பிஎன்பி இணையதளத்தின்படி, ஒரே இரவு விகிதம் தற்போது 8.30% ஆகவும், ஒரு மாதத்திற்கான எம்சிஎல்ஆர் அடிப்படையிலான கடன் விகிதம் 8.40 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஐடிபிஐ வங்கியின் இணையதளத்தின்படி, ஒரே இரவு தவணைக்கான எம்சிஎல்ஆர் 8.40% ஆகும்.
ஒரு மாதத்திற்கு எம்சிஎல்ஆர் 8.55% ஆகும். ஐடிபிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு 3 மாத எம்சிஎல்ஆர் விகிதம் 8.85% ஆகவும், 6 மாத காலத்திற்கான எம்சிஎல்ஆர் 9.10% ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கனரா வங்கி அனைத்து தவணைகளையும் 5 bps உயர்த்தியுள்ளது. இரவு நேர விகிதம் இப்போது 8.25% ஆக உள்ளது. ஒரு மாத விகிதம் 8.35% ஆகவும், 3 மாதங்களுக்கன விகிதம் 8.45% ஆகவும் உயர்த்தியுள்ளது. இதனால், வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Read More : அரசு வேலைக்காக மதம் மாறுவதா..? அதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது..!! புதுச்சேரி பெண் வழக்கில் நடந்தது என்ன..?