டிகிரி போதும்.. பொதுத்துறை வங்கியில் வேலை..!! 600 காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிக்க ரெடியா?
பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியில் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்த பணியிடங்கள் எண்ணிக்கை 600 ஆகும். தமிழகத்தில் 21 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. கேரளாவில் 13 பணியிடங்களும் கர்நாடகாவில் 21 பணியிடங்களும் நிரப்ப படுகின்றன. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.
கல்வி தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்த ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் முடித்து இருந்தால் போதும். வயது வரம்பை பொறுத்தவரை 20-28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்.சி /எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம் : ஓராண்டு ஒப்பந்த அடிபடையில் இந்த பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்படும். மாதம் ரூ. 9 ஆயிரம் ஊக்கத்தொகையாக அளிக்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை ஆன்லைன் தேர்வு, நேர்மகத்தேர்வு / குரூப் டிஸ்கசன்ஸ் முறையில் தேர்வு நடைபெறும்.
விண்ணப்ப கட்டணம் : தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரகள் ஆன்லைன் வழியாக விண்ணபிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ. 150 ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ. 100 கட்டணம் ஆகும். மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: விண்ணப்பிக்க கடைசி தேதி 24.10.2024 ஆகும். ஆர்வமும் தகுதியும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் https://bankofmaharashtra.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.