For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பதேர் பாஞ்சாலி புகழ் உமா தாஸ்குப்தா புற்று நோயால் மரணம்..!!

Bader Panjali' fame Uma Dasgupta dies of cancer
03:27 PM Nov 19, 2024 IST | Mari Thangam
பதேர் பாஞ்சாலி புகழ் உமா தாஸ்குப்தா புற்று நோயால் மரணம்
Advertisement

இயக்குநர் சத்யஜித் ரேவின் முதல் திரைப்படமான பதர் பாஞ்சாலி 1955-ல் வெளியானது. இன்றளவும் இந்த திரைப்படம் கொண்டாடப்பட்டு வருகிறது. சினிமா மீது ஆர்வம் கொண்ட பலருக்கும் முதலில் பரிந்துரைப்பது இத்திரைப்படமாகதான் இருக்கும். அந்தளவிற்கு சினிமாவில் நீக்கமற இடத்தை பிடித்திருக்கிறது இத்திரைப்படம்.

Advertisement

இந்த திரைப்படத்தில் துர்கா கதாபாத்திரமாக நடித்து புகழ்பெற்ற உமா தாஸ்குப்தா காலமானார். 84 வயதான இவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

1955 ஆம் ஆண்டு வெளியான பதேர் பாஞ்சாலி திரைப்படத்தால், அவருக்கு பேரும் புகழும் கிடைத்தபோதும், அதைத்தொடர்ந்து அவர் வேறு எந்த படங்களிலும் நடிக்காமல், திரைத்துறையை விட்டு விலகினார். ஒரே படத்தின்மூலம் பிரபலமான உமா தாஸ்குப்தாவின் மறைவு, திரைத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒப்பனையின்றி உணர்வுகளை பிரதிபலித்த அந்த படத்தில் துர்கா எனும் சிறுமி வேடம் ஏற்றிருந்தார் உமா தாஸ்குப்தா. இவரின் மறைவுக்கு திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இயக்குநர் சத்யஜித் ரேவின் மகனான சந்தீப் ரே, “சினிமா காதலர்களால் பல தலைமுறைகளுக்கு போற்றப்படுவார் உமா. பதர் பாஞ்சாலி படத்தின் படப்பிடிப்பு நடக்கும்போது நான் சிறுவனாக இருந்தேன். நான் வளர்ந்த பிறகு என்னுடைய தந்தை உமாவின் ஆற்றல் மிகுந்த நடிப்பு குறித்து என்னிடம் எடுத்துரைத்திருக்கிறார். அவர் ஒவ்வொரு காட்சியையும் அழகாக உள்வாங்கி அசலாக நடித்துவிடுவார். இதுதான் அவருக்கு முதல் திரைப்படம். அவருடைய சொந்த காரணங்களுக்காக அவர் சினிமாவிலிருந்து அப்போது விலகிவிட்டார்” எனக் கூறியுள்ளார்.

Read more ; அச்சுறுத்தும் ஹூண்டாய் காரில் நிர்வாணமாக உலா வரும் பெண் அகோரி..!! இந்த காரில் இத்தனை அம்சங்களா..?

Tags :
Advertisement