’ஒரு ஹாய் சொன்னதுக்கே லவ் பண்ணாரு தனுஷ்’..!! ’இன்னும் ஓரிரு நாளில் நயன்தாராவின் அந்தரங்க வீடியோ வெளியாகும்’..!!
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர், நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது, இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் மலர்ந்தது. இதையடுத்து, இருவரும் 2022ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண வீடியோ நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாகவே அதிலிருந்து எந்தவொரு வீடியோவும் ரிலீஸாகவில்லை. கடந்த வாரம் தான், நயன்தாரா திருமண வீடியோடிவின் ட்ரெய்லர் வெளியானது. அதில், நானும் ரவுடி தான் படத்தின் போட்டோவை பயன்படுத்தியதற்காக ரூ.10 கோடி கேட்டு தனுஷ் நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, நடிகை நயன்தாரா வெளியிட்டிருந்த அறிக்கையில், எங்களது திருமண வீடியோவை வெளியிட தனுஷ் தடையாக இருந்ததாகவும், NOC-க்காக இரண்டு ஆண்டுகள் காத்திருந்ததாகவும் கூறினார். இதனால், திருமண வீடியோவில் இருந்து நானும் ரவுடிதான் படத்தின் பாடல்கள், போட்டோக்கள் என அனைத்தையும் நீக்கிவிட்டு, செல்போனில் எடுத்த சில காட்சிகளை மட்டுமே வீடியோவில் பதிவிட்டுள்ளோம். ஆனால், அந்த டிரைலரில் இருக்கும் வெறும் 3 விநாடிக்காக தனுஷ் ரூ.10 கோடி கேட்டதாக நயன்தாரா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
இந்நிலையில், பிரபல பாடகி சுசித்ரா வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், "தனுஷைப் பற்றி நயன்தாரா பேசிய நிலையில், பலரும் தனக்கு மெசேஜ் செய்து வருவதாக கூறியுள்ளார். தனுஷை பற்றி நீங்கள் பேசியபோது யாரும் நம்பவில்லை. ஆனால், நயன்தாரா தற்போது தைரியமாக முன்வந்து பேசியிருக்கிறார் என கூறி வருகின்றனர். யாரடி நீ மோகினி படத்தின்போது நயன்தாராவை தனுஷ் ரொம்ப டார்ச்சர் செய்தார்.
தனுஷும் கார்த்திக் குமாரும் சேர்ந்து நயன்தாராவுக்கு ரூட் விட்டனர். நயன்தாரா ஒரு ஹாய் சொன்னால் போதும். தனுஷ் உடனே நயன்தாரா தன்னை காதலிப்பதாக நினைத்துக் கொள்வார். தனுஷ் முத்திப்போன சைக்கோ. வேணும்னா பாருங்க. இன்னும் 10 நாள்ல நயன் லீக்ஸ்னு வீடியோ வெளியாகும். அதை தனுஷ் வெளியிடுவார்” என்று பரபரப்பாக பேசியுள்ளார்.