முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Bad Luck Plants: ஒரு போதும் இந்த செடிகளை வீட்டில் வளர்க்கக்கூடாது..! முழு விவரம்…

Bad Luck Plants: These plants should never be grown at home..! Full Details...
07:15 AM Oct 11, 2024 IST | Kathir
Advertisement

Bad Luck Plants | பொதுவாக வெளியில் சென்று உழைத்து விட்டு வருபவர்களுக்கு, ஓய்வெடுப்பதற்கும், மகிழ்ச்சியாக இருப்பதற்கான இடம் தான் வீடு, என்னதான் வெளியில் நிறைய பிரச்சினைகள் இருந்தாலும் வீட்டிற்கு சென்றால் சரியாகிவிடும் என்று நினைப்பவர்கள்தான் இங்கு அதிகம். அப்படிப்பட்ட வீட்டை அழகாக்கவும் நல்ல சக்திகளை அதிகரிக்கவும், செடிகள் வைக்கப்படுகின்றன. ஆனால் சில செடிகள் வீட்டில் வைத்தால் கஷ்டங்கள் ஏற்படும் என கூறப்படுகிறது. எந்த மாதிரியான செடிகளை வீட்டில் வளர்க்கக்கூடாது என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.

Advertisement

கற்றாழை மற்றும் முள் செடிகள்: இவை எதிர்மறை ஆற்றலைக் கொண்டு வருவதால், அவற்றை வீட்டில் வைப்பதை தவிர்க்க வேண்டும். அவற்றை வீட்டில் வளர்ப்பதினால் மோதல் மற்றும் மன அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது.

போன்சாய் செடிகள் : போன்சாய் செடி கவர்ச்சிகரமானதாக இருந்தாலும், இவை உங்களின் வளர்ச்சியைத் தடுக்கும் எனக் கூறப்படுகிறது. எனவே வீட்டில் பொன்சாய் செடிகளை நடுவதை தவிர்க்கவும்.

மருதாணி செடி: திருமணம் போன்ற மங்களகரமான நிகழ்சசிகளில் கைகளில் அழகான வடிவமைப்புகளை உருவாக்க பொதுவாக பயன்படுத்தப்படும் மருதாணி செடிகள், வாஸ்துவில் துரதிர்ஷ்டவசமானவையாக கருதப்படுகின்றன. இந்த செடியை வீட்டில் வைத்தால் எதிர்மறை எண்ணங்களையும் அமைதியின்மையையும் உருவாக்கும் எனக் கூறப்படுகிறது.

பலாச் செடி : பலாச் செடியை வீட்டில் நடக் கூடாது. இது சோகத்தையும் எதிர்மறையையும் கொண்டு வரக்கூடும் எனக் கூறப்படுகிறது.

தாம்பூலம் அல்லது வெற்றிலை கொடி : இந்த செடி குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகளையும் சண்டைகளையும் ஏற்படுத்தும். எனவே தாம்பூலம் அல்லது வெற்றிலை கொடியை வீட்டில் நடுவதை தவிர்க்க வேண்டும்

வாடிய அல்லது காய்ந்த செடிகள் : காய்ந்த அல்லது வாடிய செடிகளை வீட்டில் நடக்கூடாது. அவை துரதிர்ஷ்டம் மற்றும் நோயைக் குறிக்கின்றன.

அரச மரம் : பொதுவாக கோயில்களில் அரச மரம் இருப்பதால், அதை வீட்டில் வளர்த்து வந்த நல்ல சக்தி இருக்கும் என்று பலர் நினைக்கிறார்கள், ஆனால் அரச மரத்தை வீட்டில் வளர்த்தால் பணக்கஷ்டம் ஏற்படும் என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.

பால் தாவரங்கள் : பால் சாறு உற்பத்தி செய்யும் தாவரங்கள் உளவியல் மற்றும் குடும்ப பிரச்சனைகளை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

Read More: இந்த ஐந்து பழக்கங்களை பின்பற்றினால் பணம் தேடி வரும்..!! சாணக்கிய நீதி கூறும் அறிவுரை இதோ..

Tags :
bad luck plantsbonsai treemoney vastu tipsPlant for Vastu Doshavastu tips for homeஇந்த செடிகளை வீட்டில் வளர்க்கக்கூடாது
Advertisement
Next Article