For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நவீன சலவையகம் அமைக்க ரூ.3 லட்சம் மானியம் தரும் அரசு..!! - சேலம் ஆட்சியர் அழைப்பு

Backward Classes, Very Backward Classes, Minorities, Scheduled Tribes are given subsidy for setting up modern laundries.
03:15 PM Aug 26, 2024 IST | Mari Thangam
நவீன சலவையகம் அமைக்க ரூ 3 லட்சம் மானியம் தரும் அரசு       சேலம் ஆட்சியர் அழைப்பு
Advertisement

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், சீர்மரபினர் இனத்தை சேர்ந்த வகுப்பினர்களுக்கு நவீன சலவையகம் அமைப்பதற்க மானியம் வழங்கப்படுகிறது.

Advertisement

தமிழ்நாட்டிலுள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த வகுப்பினர்களின் பொருளாதாரத்தை முன்னேற்றும் விதமாக நவீன சலவையகம் அமைக்க தமிழ்நாடு அரசு நிதி உதவியுடன் புதுமையான திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்: தமிழ்நாட்டிலுள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர் இனத்தை சார்ந்த வகுப்பினர்களின் பொருளாதாரத்தை முன்னேற்றும் விதமாக நவீன சலவையகம் அமைக்க தமிழ்நாடு அரசு நிதி உதவியுடன் புதுமையான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. நவீன சலவையகம் அமைப்பதற்கு தேவையான இயந்திரங்கள், மூலப்பொருட்கள் மற்றும் பிற முன் நிகழ்வுகளுக்கு தேவையன நிதியில் ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க 10 நபர்கள் கொண்ட ஒரு குழுவாக செயல்பட வேண்டும். இக்குழு உறுப்பினர்களின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் மிகாமல் இருத்தல் வேண்டும். மேற்படி திட்டம் மூலம் பயன்பெற விரும்புபவர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Read more ; BEL நிறுவனத்தில் ரூ.79,000 ஊதியத்தில் வேலை..!! ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

Tags :
Advertisement