பலரால் முதுகில் குத்தப்பட்டேன்!… தாய்க் கழகத்துடன் இணையும் மதிமுக?… வைகோ திட்டவட்டம்!
Vaiko: தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், தி.மு.க-வின் தலைவருமான கருணாநிதி இருக்கும்போதே, தி.மு.க-விலிருந்து பிரிந்து ம.தி.மு.க என்ற புதிய கட்சியைத் தொடங்கி தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை உருவாக்கியவர் வைகோ. ஆனால், தற்போது வைகோ தொடர் தேர்தல் இழப்புகள் காரணமாக, ஆளும் தி.மு.க கூட்டணிக் கட்சிகளில் ஒருவராக அங்கம் வகிக்கித்துவருகிறது.
இந்தநிலையில், சமீபத்தில் ம.தி.மு.க அவைத்தலைவர் சு.துரைசாமி, ``30 ஆண்டுக்காலமாக உங்கள் உணர்ச்சிமயமான பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தொண்டர்களை இனியும் ஏமாற்றாதீர்கள். ம.தி.மு.க-வுக்கு எதிர்காலம் இல்லை. தாய்க் கழகமான தி.மு.க-வுடன் இணைப்பதே நல்லது" என வைகோவுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்கு வைகோ தரப்பில் மறுப்பும் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக மாறியது.
இந்தநிலையில், 2024 மக்களவை தேர்தலிலும் திமுக கூட்டணியில் இருக்கும் மதிமுகவுக்கு எதிர்ப்பார்த்தை தொகுதிகளை ஒதுக்காமல், திருச்சி ஒரு தொகுதியை மட்டும் ஒதுக்கியது. இருப்பினும், பம்பரம் சின்னம் கிடைக்காமல் தீப்பெட்டி சின்னத்தில் துரை வைகோ போட்டியிட்டார். இந்தநிலையில் மதிமுகவின் 31வது ஆண்டுவிழா நடைபெற்றது. அதில் பேசிய வைகோ, மதிமுக ஒருபோதும் திமுகவுடன் இணைக்கப்படமாட்டாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
முதலில் குடை, பின்னர் பம்பரம், இப்போது தீப்பெட்டி சின்னம் கிடைத்திருக்கிறது. பொருத்திருந்து பாருங்கள் மதிமுகவுக்கு நிரந்தர சின்னம் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த வைகோ, இந்த 31 ஆண்டுகளில் பலரால் முதுகில் குத்தப்பட்டேன். திமுகவுடன் மதிமுக இணைக்கப்படும் என்று விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. ஆனால் அது ஒருபோதும் நடக்காது. 2026 தேர்தலிலும் திமுக வெற்றிபெற மதிமுக உதவும். அரசியல் களத்தில் திமுக முன்னேறி செல்ல உறுதுணையாக இருக்கும். திமுக அரசின் நலனை காக்க மதிமுக என்றென்றும் துணை நிற்கும் என்றும் அதேபோல் திமுக கூட்டணியில் இருந்து எங்களை யாராலும் பிரிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.