For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

CSK அணிக்கு பின்னடைவு..? ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்பட்ட பிரபல வீரர்..!! ரசிகர்கள் அதிர்ச்சி..!!

05:06 PM Mar 18, 2024 IST | 1newsnationuser6
csk அணிக்கு பின்னடைவு    ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்பட்ட பிரபல வீரர்     ரசிகர்கள் அதிர்ச்சி
Advertisement

இலங்கைக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியின்போது தசைப் பிடிப்பு காரணமாக வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மான் ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்பட்டார். இவரை நடப்பு ஐபிஎல் தொடருக்காக ஏலத்தில் சிஎஸ்கே அணி எடுத்துள்ளது. இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது.

Advertisement

டி20 தொடரை ஏற்கனவே இலங்கை அணி கைப்பற்றிய நிலையில் ஒருநாள் போட்டிக்கான தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் வங்கதேச அணியும், இரண்டாது போட்டியில் இலங்கை அணியும் வெற்றி பெற்று சம நிலையில் இருந்தன. இந்நிலையில், 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சட்டோகிராமில் உள்ள ஜாஹூர் அகமது சவுத்ரி மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியின் போது வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மான் தசைப் பிடிப்பு காரணமாக அவதிப்பட்டார். இதனால் அவரால் நடக்க கூட முடியாத நிலையில், மைதானத்தில் இருந்து ஸ்ட்ரெச்சரில் தூக்கி செல்லப்பட்டார். இந்த தொடரில் முதல் முறையாக 11 பேர் கொண்ட அணியில் முஸ்தஃபிசுர் சேர்க்கப்பட்ட நிலையில், அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இவரை நடப்பு ஐபிஎல் தொடருக்காக ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.2 கோடிக்கு எடுத்துள்ளது.

Read More : OPS | அதிமுக சின்னம், கொடியை பயன்படுத்த ஓபிஎஸுக்கு தடை..!! ஐகோர்ட் தீர்ப்பால் குஷியில் எடப்பாடி..!!

Advertisement