For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சவுக்கு சங்கர் தாக்கல் செய்த ஜாமீன் மனு...! ஒரே நாளில் இரண்டு முடிவு எடுக்கும் நீதிமன்றம்...!

06:10 AM May 17, 2024 IST | Vignesh
சவுக்கு சங்கர் தாக்கல் செய்த ஜாமீன் மனு     ஒரே நாளில் இரண்டு முடிவு எடுக்கும் நீதிமன்றம்
Advertisement

சவுக்கு சங்கர் ஜாமீன் கேட்டு தகவல் செய்த இரண்டு மனங்கள் மே 20 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், சென்னையைச் சேர்ந்த சவுக்கு என்ற யூடியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரி சங்கரை கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் கடந்த 4-ம் தேதி தேனியில் வைத்து கைது செய்தனர். கைது செய்த பின்னர், சங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது தேனி காவல்துறையினர் கஞ்சா வழக்கும் பதிவு செய்துள்ளனர். அதேபோல தமிழகம் முழுவதும் ஆறுக்கும் மேற்பட்ட இடங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

தற்பொழுது லால்குடி கிளை சிறையில் உள்ள சவுக்கு சங்கரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி சைபர் கிரைம் போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்று மாலை 4 மணிக்குள் சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தன் மீது பதியப்படுள்ள கஞ்சா வழக்கில் ஜாமீன் கோரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மனு தாக்கல் செய்து உள்ளார். இந்த வழக்கு வரும் மே 20-ம் தேதி விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர் ஜாமீன் கோரி கோவை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு விசாரணையும் மே 20-ம் தேதிக்கு கோவை நீதிமன்ற திநீதிபதி சரவணபாபு ஒத்திவைத்து உத்தரவிட்டார். மே 20 ஆம் தேதி 2 மனுக்கள் மீது நீதிபதிகள் தீர்ப்பு வழங்க உள்ள நிலையில் அவருக்கு ஜாமீன் கிடைக்குமா கிடைக்காதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Tags :
Advertisement