முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஆயன்குளம் அதிசய கிணறு நிரம்பியது..!! காரணம் இதுதானா..? பொதுமக்கள் அதிர்ச்சி..!!

07:11 AM Dec 20, 2023 IST | 1newsnationuser6
Advertisement

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே ஆயன்குளத்தில் அதிசய கிணறு ஒன்று உள்ளது. எப்படிப்பட்ட மழை பெய்தால், வெள்ளம் வந்தாலும் இந்த கிணறு நிரம்புவதே இல்லை என அப்பகுதி தெரிவிக்கின்றனர். கடந்த 2022ஆம் ஆண்டு பெருமழை பெய்து உருவான வெள்ள நீர் கிணறுக்குள் திருப்பிவிடப்பட்டது. அப்போதும், இந்த கிணறு நிரம்பவில்லை. இதையடுத்து, ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், இந்த கிணறு முழுக்க சுண்ணாம்புப் பாறைகளால் உருவானது என்பது தெரியவந்தது.

Advertisement

பல ஆண்டுகளாக இந்த கிணற்றில் தண்ணீர் கொட்டி வருவதால், பாறையில் துளைகள் ஏற்பட்டது. அவை பெரிதாகி, 50 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு நிலத்தடியில் நீர்வழிப்பாதை உருவாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் தான் கிணறு நிரம்பவில்லை. தற்போது 4 மாவட்டங்களை வெள்ளம் மூழ்கடித்து வரும் நிலையிலும், இந்த அதிசயக் கிணறு நிரம்பாமல் இருந்தது. இந்நிலையில், பல ஆயிரம் கன அடி நீரையும் உள்வாகும் திறன் கொண்ட ஆயன்குளம் அதிசய கிணறு திடீரென நிரம்பியதாக தகவல் பரவியது.

இந்நிலையில், கிணறு நிரம்பியதற்கான காரணம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது கிணற்றின் ஓரம் உள்ள மண் சுவர் இடிந்து, கிணற்றுக்குள் விழுந்துள்ளது. இதனால், அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே கிணறு நிரம்பியது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Tags :
அதிசய கிணறுஆயன்குளம்நெல்லை மாவட்டம்மழை வெள்ளம்
Advertisement
Next Article