For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

குட் நியூஸ்... ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க ஆணை... நவம்பர் 31-ம் தேதி வரை நீட்டிப்பு செய்து உத்தரவு...!

Order to extend payment of wages to employees till 31st November.
07:59 AM Oct 06, 2024 IST | Vignesh
குட் நியூஸ்    ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க ஆணை    நவம்பர் 31 ம் தேதி வரை நீட்டிப்பு செய்து உத்தரவு
Advertisement

சம்பளம் மற்றும் இதர படிகளுக்கான ஊதியப் பட்டியல்கள் உரிய அலுவலர்களால் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் அதை ஏற்றுக்கொண்டு ஊதியம் பெற அனுமதிக்க வேண்டும்.

Advertisement

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்; தமிழகத்தில் கடந்த 2018-ல் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் ஆகிய பணியிடங்கள் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டு மாவட்டக் கல்வி அலுவலர் என்ற பெயரில் செயல்பட உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து, அதே ஆண்டில் புதிதாக தொடங்கப்பட்ட 52 மாவட்டக் கல்வி அலுவலகங்கள் உரிய இடங்களில் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. அதேபோன்று, பழைய அலுவலகங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்துப் பணியிடங்களும் புதிய அலுவலகத்துக்கு பணி நிரவல் மூலம் மாற்றம் செய்யப்பட்டன.

பணி நிரவல் மூலம் நிரப்பப்பட்ட நிரந்தர பணியிடங்கள் போக மீதமுள்ள 197 தற்காலிக பணியிடங்களுக்கு கடந்த 2021 ஆக.10 முதல் 2024 மே 31-ம் தேதி வரை தற்காலிக தொடர் நீட்டிப்பு ஆணை வழங்கப்பட்டு முடிவடைந்து விட்டது. இதையடுத்து கடந்த ஆக.31 வரை ஊதியம் வழங்க இரு முறை தற்காலிக நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த 197 பணியிடங்களுக்கு நிகழாண்டு செப்.1 முதல் அடுத்த ஆண்டு பிப்.28 வரை மேலும் ஆறு மாதங்களுக்கு தொடர் நீட்டிப்பு ஊதிய கொடுப்பாணை வழங்குமாறு பள்ளிக் கல்வி இயக்குநர், அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதனை ஏற்று மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் மாவட்டக் கல்வி அலுவலகப் பணியிடங்களாக மாற்றம் செய்து, 52 அலுவலகங்களிலுள்ள 197 தற்காலிக பணியிடங்களுக்கு 1.9.2024 முதல் 31.11.2024 வரை மூன்று மாதங்களுக்கு தொடர் நீட்டிப்பு ஊதிய கொடுப்பாணை வழங்கப்படுகிறது. மேற்கண்ட அலுவலர்களுக்கான சம்பளம் மற்றும் இதர படிகளுக்கான ஊதியப் பட்டியல்கள் உரிய அலுவலர்களால் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் அதை ஏற்றுக்கொண்டு ஊதியம் பெற அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement