Bank: மே 1-ம் தேதி முதல் ஆக்சிஸ் வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டில் வரும் அதிரடி மாற்றம்...!
இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கியான ஆக்சிஸ் வங்கி, மே 1, 2024 முதல் அதன் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுடன் தொடர்புடைய பலன்களில் மாற்றங்களைச் செயல்படுத்த உள்ளது. இந்த மாற்றங்கள் படி, மேக்னஸ் கடன் அட்டை, டெபிட் கார்டுகளைப் பயன்படுத்துபவர்களை பாதிக்கும்.
மேலும் Burgundy டெபிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு, விமான நிலைய ஓய்வறைகளுக்கான இலவச சலுகை தகுதிபெற சில நிபந்தனைகள் இப்போது பொருந்தும். மே மாதத்திற்கு முந்தைய மூன்று மாதங்களில் பயனர்கள் தங்கள் அட்டை மூலம் குறைந்தபட்சம் ரூ. 5,000 மதிப்புள்ள பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டும்.
கூடுதலாக, ஸ்வைப் மிஷின்கள் அல்லது வெளிநாடுகளில் ஆன்லைன் பிளாட்ஃபார்ம்களில் மேற்கொள்ளப்படும் சர்வதேச பரிவர்த்தனைகளுக்கு Burgundy கார்டு வைத்திருக்கும் நபர்களுக்கு டைனமிக் கரன்சி மாற்றத்திற்கான 1 சதவீத மார்க்-அப் கட்டணம் விதிக்கப்படும். இருப்பினும், புக்மைஷோ சலுகையிலிருந்து பயனடையலாம், தலா ரூ. 500 மதிப்புள்ள நான்கு டிக்கெட்டுகள் மற்றும் மாதத்திற்கு ரூ. 1,000 மதிப்புள்ள நான்கு டிக்கெட்டுகள் கிடைக்கும்.