முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

செவிலியர்களுக்கு அட்டகாசமான வாய்ப்பு..!! மாதம் ரூ.3 லட்சம் சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Education related counseling and employment are being provided under the Nan Muluvan scheme
08:48 AM Sep 18, 2024 IST | Chella
Advertisement

தமிழ்நாட்டில் உயர்கல்வியில் கலை அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி மற்றும் தொழில்நுட்ப கல்வி மூலம் படித்து ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்கள் வேலை தேடி வெளியேறுகின்றனர். இந்த மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு வேலைவாய்ப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

Advertisement

அந்த வகையில், அரசு துறையில் இணைய ஆர்வமுள்ளவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. இதில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்காலத்தை திட்டமிட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, உயர்கல்வியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதற்கிடையே, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை சார்பாக வேலைவாய்ப்பு முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஓசூரில் அமையவுள்ள பிரபல தொழிற்சாலையான டாடா நிறுவனம் சார்பாக பணியாளர் தேர்வு நடத்தப்பட்டது. செப்டம்பர் மாதத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் நேர்காணல் நடைபெற்றது.

இந்நிலையில், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் சார்பில் சவுதி அரேபிய அமைச்சகத்தில் உள்ள மருத்துவ பணிக்கு முதுகலை பட்டம் பெற்ற மருத்துவர்கள் 55 வயதிற்கு மிகாமல், 3 வருட பணி அனுபவத்துடன் தேவைப்படுகிறார்கள் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. வெளிநாட்டு வேலைகளுக்கான பணியிடங்கள் குறித்த விவரங்கள் இந்நிறுவன வலைதளமான www.omcmanpower.tn.gov.in ல் கண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதே போன்று தற்போது செவிலியர்களுக்கும் புதிய வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்வி தொடர்பான ஆலோசனைகளும், வேலைவாய்ப்பும் ஏற்படுத்தி வழங்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் வேலை பார்க்க விருப்பமுள்ள செவிலியர்களுக்கு நான் முதல்வன் பினிஷிங் பள்ளி மூலமாக ஜெர்மனியில் நர்சிங் வேலைக்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

6 மாத காலம் ஜெர்மன் மொழியும் கற்றுத் தரப்படும். ஏ12 பி2 வரை கற்றுத் தரப்படும். நர்சிங் வேலைவாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது. இதற்காக எந்தவித செலவும் இல்லையென அரசு தெரிவித்துள்ளது. அந்த வகையில், 2300 முதல் 3300 யூரோ மாத சம்பளமாக வழங்கப்படும். இந்திய மதிப்பில் 3 லட்சம் ரூபாய்க்கு மேல் வழங்கப்படும். தேர்வாகும் செவிலியர்களுக்கு இலவசமாக விசாவும், விமான டிக்கெட்டும் வழங்கப்படும். 100% வேலைவாய்ப்பு உறுதி. இதுகுறித்த கூடுதல் தகவல்களை நான் முதல்வன் வலைத்தளமான https://naanmudhalvan.tn.gov.in/ அல்லது செய்தி மக்கள் தொடர்புத்துறை சமூக ஊடக பக்கங்களில் தெரிந்து கொள்ளலாம்.

Read More : பீதியை கிளப்பும் 5 கணிப்புகள்..!! 2024 முடிவதற்குள் இது நடக்கும்..!! எச்சரிக்கும் டைம் டிராவலர்..!!

Tags :
செவிலியர்கள்தமிழ்நாடு அரசுவேலைவாய்ப்பு
Advertisement
Next Article