முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

'சுட்டெரிக்கும் வெயில்' : வெளியில் செல்வதை தவிர்க்கவும்! சுகாதாரத்துறை எச்சரிக்கை..

03:12 PM May 07, 2024 IST | Mari Thangam
Advertisement

கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், பொதுமக்களுக்கு தமிழக சுகாதாரத்துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

Advertisement

‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் கத்திரிவெயில் தொடங்கியதையடுத்து, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 110 டிகிரியை தாண்டி வெப்பத்தின் அளவு பதிவாகி வருகிறது. வெயிலுடன் சேர்ந்து அனல் காற்றும் வீசி வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இனி வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் 110 டிகிரி வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதுகுறித்து காதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வெயில் அதிகரிக்கும் போது ஆக்சிஜன் லெவல் மிகக் குறைவாக இருக்கும். அதனால், மதிய வேளையில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். நோயாளிகள், கர்ப்பிணிகள் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஐஸ் கட்டிகள், ஐஸ் வாட்டர், குளிர்பானங்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஐஸ் போடாமல் பழச்சாறு அருந்தலாம். இளநீர் பருகலாம். இது எல்லாவற்றையும் விட மிகச் சிறந்தது மோர். பயணத்தின் போது பாட்டிலில் எடுத்து செல்லுங்கள்.‌

அனைவரும் காலையிருந்தே மோர் மற்றும் நீராகாரங்களை அடிக்கடி உட்கொள்ளுங்கள். காபி, டீ இன்னும் ஒரு மாதத்திற்கு வேண்டாம். காலையில் சுடுநீரில் இஞ்சி போட்டு சாப்பிட்டு வர பித்தம் தணியும். முதலுதவி போல எலுமிச்சை எப்போதும் வீட்டில் இருக்கட்டும். மாமிச உணவு, அதிக எண்ணெய் மற்றும் காரம் வேண்டாம்.

வெயிலில் இருந்து வந்தவுடன் சிறிது நேரம் சென்று வியர்வை தணிந்தவுடன் தண்ணீர் அருந்தவும். உடனே ஐஸ் வாட்டர் அருந்தினால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். மூளையில் இருந்து வரும் நரம்புகள், ஒலியின் வேகத்தை விட அதிக ஆற்றலை செலுத்தி என்ன நடக்கிறது என அறிய முயற்சி செய்யும். அந்த வேகத்தை ரத்த நாளங்கள் தாங்க முடியாமல் வெடித்து விட வாய்ப்புண்டு. உடனே அருந்த வேண்டுமென்றால் சிறிதளவு மிதமான வெந்நீர் அருந்தினால் உடல் சமநிலை அடையும்; ஆபத்தில் இருந்தும் தப்பலாம். மண் பானை நீர் நம்மை எல்லா காலத்திலும் காக்கும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
summertn health department
Advertisement
Next Article