கனமழையால் விடுமுறையில் இருக்கும் மாணவர்களின் கவனத்திற்கு..!! அமைச்சரின் இந்த உத்தரவை கவனிச்சீங்களா..?
தெற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மேற்கு – வடமேற்கு திசையில் வட தமிழகம் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 17-ம் தேதி அதிகாலையில் வட தமிழகம், தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளை கடந்து நெல்லூர் – புதுச்சேரி இடையே சென்னைக்கு அருகே கரையை கடக்கும்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே கரையை கடக்கும் சமயத்தில் தரை காற்றின் வேகம் மணிக்கு சுமார் 35 கிமீ முதல் 55 கிமீ வரை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னையில் இருந்து 440 கிமீ. தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து 460 கிமீ. கிழக்கு தென் கிழக்கில் மையம் கொண்டுள்ளது. மணிக்கு சுமார் 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. கடந்த 6மணி நேரத்தில் மணிக்கு சுமார் 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் வானிலை ஆய்வு மைய தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு நேற்று மற்றும் இன்றைக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கும், அரசு அலுவலர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் கனமழை முடியும் வரை மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டாம் என அனைத்து பள்ளி நிர்வாகங்களையும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக்கொண்டுள்ளார். கனமழை மற்றும் தீவிரக் காற்று வீசுவதால், மாணவர்கள் தொழிநுட்ப சிக்கல்களை எதிர்கொள்ளலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Read More : குலதெய்வம் தோன்றியது எப்படி தெரியுமா..? மக்களே இந்த வழிபாட்டை மறந்துறாதீங்க..!!