முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மாணவர்கள் கவனத்திற்கு..!! பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியாகிறது..!!

07:10 AM Nov 16, 2023 IST | 1newsnationuser6
Advertisement

2023 - 24ஆம் கல்வி ஆண்டுக்கான பள்ளி வகுப்புகள் ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது. கடந்தாண்டு பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட்டு மே மாதத்தில் முடிக்கப்பட்டது. இதனால் நடப்பு கல்வி ஆண்டு தொடக்கத்திலேயே பொதுத்தேர்வுகள் வழக்கம் போல் மார்ச் மாதங்களில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

வழக்கமாக, தமிழ்நாட்டில் பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை அக்டோபர் இறுதியிலோ அல்லது நவம்பர் மாத தொடக்கத்திலோ வெளியிடப்படும். ஆனால், நடப்பாண்டு பொதுத்தேர்வு அட்டவணை வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால், அந்த தேதியை பார்த்துவிட்டு பொதுத்தேர்வுகளை அறிவிக்கலாம் என அரசு முடிவு செய்திருந்தது.

ஆனால், தேர்தல் தேதி இப்போதைக்கு வெளியிடப்படுவதாக தெரியவில்லை. இதனால், பொதுத்தேர்வு தேதிகளை அறிவித்துவிடலாம் என பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இப்போது தேர்வு அட்டவணையை வெளியிட்டால் தான், மாணவர்கள் அதற்கேற்ப தயாராக முடியும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பேட்டி அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், இன்னும் ஒரு சில நாட்களில் பொதுத் தேர்வு அட்டவணை வெளியாகும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று (நவ.16) காலை 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுகிறார். நீட், ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுகளை கருத்தில்கொண்டு பொதுத்தேர்வு தேதிகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Tags :
அமைச்சர் அன்பில் மகேஷ்பள்ளிக்கல்வித்துறைபொதுத்தேர்வு அட்டவணைமாணவர்கள்
Advertisement
Next Article