"இந்த நோய் உள்ளவர்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படும்"..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!
ஆண்மை குறைபாடு, குழந்தையின்மை போன்ற பிரச்சினைகள் பெருமளவில் அதிகரித்து வரும் நிலையில் அதற்கு நீரிழிவு நோயும் முக்கியக் காரணமாக இருக்கிறது. சாதாரணமாக உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் ஆண்களைக் காட்டிலும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக ஆண்மைக் குறைபாடு, கருவளம் குன்றுதல், விந்தணு குறைபாடு, பாலியல் ஆர்வம் குறைதல் போன்ற பிரச்சினைகளை சந்திக்கிறார்கள்.
நீரிழிவு நோய்க்கும் ஆண்மைக் குறைபாடு, பாலியல் ஆர்வம் குறைதல், விறைப்புக் கோளாறு ஆகியவற்றுக்கும் உள்ள தொடர்பு குறித்து பெரும்பாலானோருக்கும் இருக்கும் சந்தேகங்களையும் அதற்கான பதில்களையும் இங்கே பார்க்கலாம்.ரிழிவு பிரச்சினை இருக்கும்போது நரம்புகளில் தளர்வு உண்டாகும். இது விறைப்புத்தன்மை மற்றும் விந்துதள்ளலைக் கட்டுப்படுத்துகிற இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளை சேதப்படுத்துவதன் மூலம் ஆண்களின் கருவுறுதலைப் பாதிக்கும். இதன் காரணமாக விறைப்புச் செயலிழப்பு, விந்தணு உற்பத்தி மற்றும் இயக்கம் ஆகியவற்றில் சிக்கல்களை ஏற்படுத்தும்.
ரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை இனப்பெருக்க அமைப்பில் உள்ள இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளை சேதப்படுத்தும். இது ஆண்குறிக்கு இரத்த ஓட்டம் செல்வதைத் தடுத்து விறைப்புக் கோளாறை உண்டாக்கும். கூடுதலாக, உயர் இரத்த சர்க்கரை அளவு ஆக்ஸிஜனேற்ற அழுத்தம், வீக்கம் மற்றும் விந்தணு உற்பத்தி ஆகியவற்றைப் பாதிக்கும். குறிப்பாக ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுக்கும்.நீரிழிவு நோயினால் ஏற்படும் ஆண் மலட்டுத்தன்மையின் அறிகுறிகளில் சில முக்கியமானவை இதோ, ஹார்மோன்கள் குறைபாடு, விறைப்புக் கோளாறு, பாலுறவில் ஈடுபாடு குறைதல், விந்து வெளியேற்றத்தில் ஏற்படும் சிக்கல்கள், விந்தணு எண்ணிக்கை குறைபாடு,விந்துவின் தன்மை மாறுபடுதல் போன்ற அறிகுறிகள் தோன்றும்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள் குழந்தைகளைப் பெறலாம். ஆனால் அவர்கள் கருவுருதலையும் கருவளத்தையும் மேம்படுத்த சில சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். இருப்பினும், இரத்த சர்க்கரை அளவை சரியான முறையில் நிர்வகித்தல், வாழ்க்கை முறை மாற்றங்கள், மருத்துவ சிகிச்சைகள் ஆகியவற்றை முறையாகப் பின்பற்றினால் நீரிழிவு நோயுள்ள ஆண்கள் மிக எளிதாக குழந்தைப் பேறை அடைய முடியும்.
Read More : கணவனுக்கு சாப்பாடு போட மறுத்த மனைவி..!! கழுத்தை நெரித்துக் கொன்ற கொடூரம்..!! நடந்தது என்ன..?