முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’கல்வி எவ்வளவு முக்கியமோ இதுவும் ரொம்ப முக்கியம்’..!! ’ஆசிரியர்கள் இனியும் இதை பண்ணாதீங்க’..!! அமைச்சர் உதயநிதி அட்வைஸ்..!!

Minister Udhayanidhi Stalin has said that as much as education is important, exercise and sports are also important.
07:57 AM Aug 05, 2024 IST | Chella
Advertisement

கல்வி எவ்வளவு முக்கியமோ, உடற்பயிற்சி விளையாட்டும் முக்கியம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை பெரியமேடில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் சர்வதேச தேசிய மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் 2023-2024ஆம் கல்வியாண்டில் 10, 12ஆம் வகுப்பு அரசு பொது தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்ற தனியார் பள்ளிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், ”திமுகவில் இருக்கும் ஒவ்வொரு தொண்டனுக்கும் படிக்கும் மாணவனை பார்த்தால் ஒரு மகிழ்ச்சி இருக்கும். திமுக ஆட்சியில் கல்வியில் தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக இருப்பதற்கு தனியார் பள்ளிகள் அளிக்கும் ஒத்துழைப்பு மிக மிக முக்கியம். உண்மையான கல்வி பாடத்தை புரிந்து கொண்டு படிக்க வேண்டும். விரைவில் கோவை, திருச்சியில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைய உள்ளது.

ஆர்டிஐ சட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. முதல்முறையாக கேலோ இந்தியா போட்டியில் தமிழ்நாடு 2-வது இடத்தை பிடித்துள்ளது. ஆசியர்கள் விளையாட்டுப் பீரியடை கடன் வாங்கி வேறு வகுப்பை நடத்த வேண்டாம். கல்வி எவ்வளவு முக்கியமோ, அந்த அளவிற்கு உடற்பயிற்சி விளையாட்டு முக்கியம். Maths, Science டீச்சர்கள் விளையாட்டு பீரியடை கடன் வாங்காதீர்கள்' என்று தெரிவித்தார்.

Read More : இத்தனை சோகத்திலும் இப்படி ஒரு கேவலமான செயலா..? எப்படித்தான் மனசு வருதோ..? வயநாட்டில் அதிர்ச்சி..!!

Tags :
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்ஆசிரியர்கள்கல்வி
Advertisement
Next Article