சர்க்கரை நோயாளிகளே கவனம்..!! குளிர்காலத்தில் இந்த தவறுகளை பண்ணிடாதீங்க..!! ரொம்பவே ஆபத்து..!!
இந்தியா முழுவதும் குளிர்காலம் தொடங்கியுள்ளது. இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக வெப்பநிலை படிப்படியாக குறைந்து, குளிர் அதிகரித்து வருகிறது. குளிர்காலத்தில் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இல்லையென்றால், நீங்கள் நோய்வாய்ப்படலாம். குளிர் காலத்தில் தண்ணீர் குறைவாக குடிப்பதால் நீரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இது சிறுநீரக பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
சிறுநீரகத்திற்கு உகந்த உணவு :
உங்கள் டயட்டில் பிரெஷான பழங்கள் மற்றும் பச்சை இலை காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். உப்பு, பதப்படுத்தப்பட்ட மற்றும் அதிக கலோரி கொண்ட உணவுகளை தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், இந்த உணவுகள் சிறுநீரகத்தை மோசமாக பாதிக்கிறது. உங்களுக்கு மது அருந்தும் பழக்கம் மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால் விலகி இருப்பது நல்லது.
அதிக தண்ணீர் குடிக்கவும் :
மக்கள் குளிர்காலத்தில் தண்ணீர் குடிப்பதை குறைத்துக் கொள்வார்கள். இதனால் உடல் நீரிழப்புக்கு ஆளாகிறது. நிறைய தண்ணீர் குடிப்பது சிறுநீரகத்திற்கு நல்லது. நாள் முழுவதும் 8 கிளாஸ் தண்ணீர் வரை குடிக்கலாம்.
இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கவும் :
இரத்த அழுத்தம், உயர் இரத்த சர்க்கரை அளவு போன்ற பிரச்சனை குளிர்காலத்தில் அதிகம் வரும். எனவே, இது உங்கள் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். இதை தவிர்க்க, இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
உடலை சூடாக வைத்திருக்கவும் :
குளிர்ந்த காலநிலையில் உடலை சூடாக வைத்திருப்பது அவசியம். குளிர்ந்த காலநிலையில் ரத்த அழுத்தம் அதிகரித்து சிறுநீரகத்தை சேதப்படுத்தும். எனவே, வெதுவெதுப்பு தரும் ஆடைகளை அணிந்து, உடலை சூடாக வைத்திருக்க முயற்சிக்க வேண்டும்.
சுறுசுறுப்பான வாழ்க்கை முறை :
மக்கள் குளிர்காலத்தில் எந்த தொந்தரவும் தராத வசதியான வாழ்க்கை முறையை விரும்புகின்றனர். ஆனால் இந்த சமயத்தில் சுறுசுறுப்பான வாழ்க்கை முறை தான் சிறந்தது. உங்கள் தினசரி வழக்கத்தில் யோகா, உடலை அசைக்கும் பயிற்சிகள் மற்றும் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.