For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான நடக்கும் கொடுமைகள்.. தவெக தலைவர் விஜய் கடிதம்...!

Atrocities against women in Tamil Nadu.. Letter from T.V.k. leader Vijay
07:36 AM Dec 30, 2024 IST | Vignesh
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான நடக்கும் கொடுமைகள்   தவெக தலைவர் விஜய் கடிதம்
Advertisement

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பல்வேறு கொடுமைகளை கண்டு மன அழுத்தத்திற்கும் சொல்லொணா வேதனைக்கு ஆளாகிறேன். பெண்களுக்கான பாதுகாப்பை யாரிடம் கேட்பது..? ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனுமில்லை. எல்லா சூழல்களிலும் அண்ணனாகவும், அரணாகவும் உங்களுடன் உறுதியுடன் நிற்பேன் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

Advertisement

இது குறித்து தவெக தலைவர் விஜய் எழுதிய கடிதத்தில்; கல்வி வளாகம் முதற்கொண்டு, ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தாய்மார்கள், என்னருமைத் தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்துத் தரப்புப் பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக அவலங்கள் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளைக் கண்டு, உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும் சொல்லொணா வேதனைக்கும் ஆரளாகிறேன்.

யாரிடம் உங்கள் பாதுகாப்பைக் கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்கை எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனுமில்லை என்பது தெரிந்ததே. அதற்காகவே இக்கடிதம். எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன். அண்ணாவாகவும், அரணாகவும். எனவே அதை பற்றியும் கவலை கொல்லாமல் கல்வியில் கவனம் செலுத்துஙகள். பாதுகாப்பான தமிழகத்தைப் படைத்தே தீருவாம். அதற்கான உத்திரவாதத்தை நாம் அனைவரும் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம் என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement