Alert..! தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டி வளிமண்டல கீழடுக்கு சுழற்சி...! 15 மாவட்டத்தில் கனமழை
மன்னார் வளைகுடா பகுதிகளிலும், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டியும் தலா ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், நவம்பர் 1, 2-ம் தேதிகளில் பெரும் பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; மன்னார் வளைகுடா பகுதிகளிலும், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டியும் தலா ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், நவம்பர் 1, 2-ம் தேதிகளில் பெரும் பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
திண்டுக்கல், மதுரை, திருச்சி,கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு,தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட ஆகிய 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.நவ.1-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர்,ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.