முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அடேங்கப்பா!. இனி ரயில் சேவைகள் அனைத்துக்கும் ஒரே சூப்பர் செயலி!. ரூ.100 கோடியில் ரயில்வே நிர்வாகம் அதிரடி!

Atengappa!. Now one super app for all train services!. 100 crores of railway administration in action!
08:23 AM Nov 05, 2024 IST | Kokila
Advertisement

App: ரயில் சேவையை பயன்படுத்தும் பயணியர், ஒவ்வொரு சேவைக்கு என்று தற்போது தனித்தனியே உள்ள செயலிகள் மற்றும் இணையதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு, 'ஐ.ஆர்.சி.டி.சி., ரயில் கனெக்ட்' என்ற செயலி மற்றும் இணையதளத்தை பயன்படுத்துகின்றனர். ரயில் பயணத்தின்போது உணவு ஆர்டர் செய்வதற்கு, 'ஐ.ஆர்.சி.டி.சி., இ - கேட்டரிங்' செயலி பயன்படுத்தப்படுகிறது. பயணத்தின் போது புகார் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்க, 'ரயில் மடாட்' என்ற செயலி உள்ளது.

Advertisement

முன்பதிவு இல்லா டிக்கெட்டை ஆன்லைன் வாயிலாக பெற, யு.டி.எஸ்., என்ற செயலியும்; ரயில் இயக்கப்படும் விபரங்களை தெரிந்து கொள்ள, என்.டி.எஸ்., என்ற செயலியும் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில், ஐ.ஆர்.சி.டி.சி., செயலியை மட்டும் 10 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். ரயில் சேவைகளுக்காக அதிகம் பயன்படுத்தப்படும் செயலியாக இது உள்ளது. 2023 - 24ல் ஐ.ஆர்.சி.டி.சி., 4,270 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது. இதில், 1,111 கோடி ரூபாய் நிகர லாபம் கிடைத்துள்ளது.

இந்த காலகட்டத்தில், 45.30 கோடி டிக்கெட்கள் ஐ.ஆர்.சி.டி.சி., வாயிலாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. டிக்கெட் முன்பதிவில் மட்டும் 30.33 சதவீத வருவாய் கிடைத்துஉள்ளது. நடைமேடை சீட்டு மற்றும் மாதாந்திர ரயில் பயண அட்டை பெறுவதற்கான யு.டி.எஸ்., செயலியை ஒரு கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த அனைத்து செயலிகளையும், சி.ஆர்.ஐ.எஸ்., எனப்படும் ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையம் உருவாக்கி நிர்வகித்து வருகிறது.
இந்நிலையில், இந்த அனைத்து செயலிகளையும் ஒருங்கிணைக்கும் விதமாக, 'சூப்பர் ஆப்' என்ற புதிய செயலியை சி.ஆர்.ஐ.எஸ்., உருவாக்கி வருகிறது. இதற்காக 100 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

ரயில்வே துறை மூத்த அதிகாரிகள் கூறியதாவது:ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு, ஐ.ஆர்.சி.டி.சி., செயலி தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும். தற்போது உருவாக்கப்படும் சூப்பர் செயலி, ஐ.ஆர்.சி.டி.சி., செயலியுடன் ஒருங்கிணைக்கப்படும். மேலும், ரயில்வே சேவைகளை வழங்கி வரும் பிற செயலிகளையும் இந்த சூப்பர் செயலியுடன் ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.பயணியர் இன்னும் எளிதாக பயன்படுத்தக்கூடிய வகையில் செயலி வடிவமைக்கப்பட உள்ளது. இது, அடுத்த மாதம் இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Readmore: எலும்பு ஆரோக்கியத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் குளிர்பானங்கள்!. நிபுணர்கள் கூறுவது என்ன?

Tags :
100 croresall train servicessuper apptrain
Advertisement
Next Article