For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அடேங்கப்பா..!! சென்னை ரயில் நிலையங்களுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படுகிறது தெரியுமா..?

11:57 AM May 08, 2024 IST | Chella
அடேங்கப்பா     சென்னை ரயில் நிலையங்களுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படுகிறது தெரியுமா
Advertisement

சென்னை கோட்டத்திற்குட்பட்ட ரயில் நிலையங்களில் இன்று வரை தண்ணீர் பற்றாக்குறை இல்லை என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Advertisement

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை பேசின் பிரிட்ஜ் பனிமனையில் சுமார் 45 ரயில்களை பராமரிக்க ஒரு நாளைக்கு 51.72 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதில், 38.11 லட்சம் லிட்டர் சென்னை மெட்ரோ நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தால் பூர்த்தி செய்யப்படுகிறது. 13.61 லட்சம் லிட்டர் தண்ணீர் நிலத்தடி நீர் மற்றும் லாரிகள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் பராமரிப்பு மற்றும் ரயில் பெட்டியில் தண்ணீர் பாய்ச்சுவதற்கு நாள் ஒன்றுக்கு 11.63 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதில், 0.85 லட்சம் லிட்டர் சென்னை மெட்ரோ நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தால் பூர்த்தி செய்யப்படுகிறது. நிலத்தடி நீர் மற்றும் லாரிகள் மூலம் தினமும் 10.77 லட்சம் லிட்டர் விநியோகம் செய்யப்படுகிறது. சென்னை புறநகர் முனையத்தில் ஒரு நாளைக்கு 3.5 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவையை சென்னை மெட்ரோ நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் பூர்த்தி செய்து வருகிறது.

இதேபோல, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 23.70 லட்சம் லிட்டர் தேவை உள்ளது. அதில் 5 லட்சம் லிட்டர் சென்னை மெட்ரோ நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் மூலம் வழங்கப்படுகிறது. 18.70 லட்சம் லிட்டர் தண்ணீர் நிலத்தடி நீர் மூலம் பூர்த்தி மற்றும் லாரிகள் மூலம் வழங்கப்படுகிறது. மேற்கூறியவற்றில் இன்றுவரை தண்ணீர் பற்றாக்குறை இல்லை என்பதும், சென்னை மெட்ரோ நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் மூலம் ஒரு நாளைக்கு 90.56 லட்சம் லிட்டர் தண்ணீரின் தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : இது மட்டும் உங்களிடம் இருந்தால் 50 லிட்டர் பெட்ரோல் இலவசம்..!! எப்படி தெரியுமா..?

Advertisement