வரி விலக்கு பெறுவது எப்படி? பணத்தை சேமிக்க ஈஸி டிப்ஸ் இதோ!!
ஒவ்வொரு நிதியாண்டு முடிவடையும் போதும், வருமானம் மற்றும் பிற லாபங்களின் அடிப்படையில் வெவ்வேறு விகிதங்களில் வருமான வரி செலுத்துகிறீர்கள். இந்த நிலையில், வருமான வரிச் சட்டம் 1961 விதிகளின் படி, சில வரி சலுகைகள், வரி விலக்குகள் உள்ளிட்டவை அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. அதாவது பொதுமக்கள் வெவ்வேறு வகைகளில் முதலீடுகள் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது. அந்த முதலீட்டுத் திட்டங்களில் சேருவதன் மூலமாக வரி செலுத்தும் முதலீட்டாளர் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரையிலும் வரி விலக்கு கோர முடியும். அவை என்னென்ன திட்டங்கள் என்பதனை தற்போது பார்க்கலாம்.
பொது வருங்கால வைப்பு நிதி (PPF): பொது வருங்கால வைப்பு நிதி திட்டம், பெரும்பாலான இந்திய வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் 15 ஆண்டுகளுக்கு 7.10% வரி இல்லாத வட்டி விகிதத்தில் கிடைக்கும். வட்டி விகிதம் காலாண்டுக்கு ஒருமுறை மாறும். வருமான வரி (I-T) சட்டத்தின் பிரிவு 80C, 1.5 லட்சம் வரை PPF வரி விலக்குகளை அனுமதிக்கிறது.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF): EPF திட்டத்தில் ஊழியர் மற்றும் வேலை செய்ய்ம் நிறுவனமும் சமமான பங்களிப்பைச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் போது ஊழியர் ஓய்வு பெறும்போது, ஒரு மொத்தத் தொகையைப் வட்டியுடன் பெறுகிறார். இந்த வருங்கால வைப்பு நிதி மூலமாகவும், நீங்கள் வரிகளைச் சேமிக்கலாம். இத்திட்டத்திற்கு வழங்கப்படும் சம்பளத் தொகையில் 12 சதவீத பங்களிப்பு, பிரிவு 80C-இன் கீழ் ரூ.1.5 லட்சமாக கணக்கிடப்பட்டு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
FD நிலையான வைப்பு நிதி : NBFC எனப்படும் வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சேமிப்புப் திட்டம்தான் இந்த FD (Fixed Deposit). ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நிலையான வட்டி விகிதத்தில் ஒரு பெரிய தொகையை FD கணக்கில் முதலீடு செய்யலாம். காலத்தின் முடிவில் மொத்தத் தொகையையும் வட்டியையும் பெறுவீர்கள். இந்த நிலையான வைப்பு நிதி திட்டம் மூலம், 1961 இன் இந்திய வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் விலக்கு அளிக்கப்படும். இதனால் முதலீட்டாளர்கள் ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு பெற முடியும்.
யூனிட்-இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம் (ULIP): ULIP என்பது ஒரு வகையான காப்பீட்டுத் திட்டமாகும், இது ஒரு பேரிடர் நிகழ்வின் போது உங்கள் குடும்பத்திற்கு நீண்ட கால முதலீடு மற்றும் நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது. உங்களின் நிதி நோக்கங்களின் அடிப்படையில் நிதிகளுக்கு இடையில் மாறவும் ULIPகள் உங்களை அனுமதிக்கின்றன. 1961 இன் வருமான வரிச் சட்டத்தின் 80C மற்றும் 10(10D) பிரிவுகளின் கீழ் ULIPகளில் முதலீடு செய்வதன் மூலம் வரிகளைச் சேமிக்கலாம்.
Read more ; இன்வெர்ட்டரில் இருந்து பரவிய தீ!! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி..