முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இனியாவது சாப்பாட்டிற்கு உரிய மரியாதை கொடுங்கள்..!! இந்த தவறுகளை செய்து சாபத்திற்கு ஆளாகாதீர்கள்..!!

According to Hindu mythology, dishonoring food is the greatest sin.
05:30 AM Nov 05, 2024 IST | Chella
Advertisement

நாம் சாப்பிடும் சாப்பாட்டிற்கு உரிய மரியாதையை பெரும்பாலானவர்கள் கொடுப்பதே கிடையாது. அலட்சியப் போக்குடன் சாப்பிடுவது, சாப்பிடும் போது காலில் செருப்பு அணிந்த படி சாப்பிடுவது, கால் மேல் கால் போட்டபடி சாப்பிடும் பழக்கம் பலருக்கும் உண்டு. இன்னும் சிலர் சாப்பிட்ட தட்டிலேயே கைகளை கழுவுவார்கள். ஆனால், அப்படி சாப்பிட்ட தட்டிலேயே கைகளை கழுவினால், அந்த உணவு தீய விளைவுகளையே தரும் என சனாதன தர்மம் சொல்கிறது.

Advertisement

இதனால் உணவுக்குரிய தெய்வமாக கருதப்படும் அன்னபூரணி கோபம் கொள்வாளாம். இது அந்த குறிப்பிட்ட நபருக்கு மட்டுமின்றி, அவரின் குடும்பத்திற்கே தீராத கஷ்டத்தை கொடுக்குமாம். யார் ஒருவர் மீது அன்னபூரணி கோபம் கொள்கிறாளோ அவர்களின் கெட்ட நாட்கள் அன்று முதல் தொடங்குமாம். இப்படிப்பட்டவர்கள் அவர்களின் வாழ்வில் வறுமையை சந்திக்க நேரிடும். தீராத மனக்கஷ்டத்தை சந்திக்க வேண்டி இருக்கும்.

சாப்பிடுவதற்கு மட்டுமல்ல, உணவு பரிமாறுவதற்கும் கூட சில விதிகள் உள்ளன. யாருக்காவது நீங்கள் உணவு பரிமாறினீர்கள் என்றால் இரட்டை படை எண் கொண்ட எண்ணிக்கையில் வழங்குங்கள். உதாரணமாக ஒருவருக்கு ரொட்டி கொடுத்தால், 2 அல்லது 4 என்ற எண்ணிக்கையில் கொடுக்க வேண்டுமாம். ஒற்றை படை எண்களில் உணவுகளை பரிமாறுவது மிகவும் அமங்களமான செயலாக பார்க்கப்படுகிறது. 3 என்ற எண்ணிக்கையில் வைத்தால் அது இறந்தவர்களின் தட்டில் உணவு பரிமாறுவதற்கு சமம்.

இந்து புராணங்களின் படி, உணவை அவமதிப்பது மிகப் பெரிய பாவம். ஒருவர் தான் சாப்பிடும் அளவை விட கூடுதலாக உணவை தனது தட்டில் வைத்து சாப்பிட்டாலும், அது பாவமாகும். உணவை எப்போதும் வீணாக்க கூடாது. உணவை வீணடிப்பதால் அன்னபூரணியின் கோபத்திற்கு ஆளாவதுடன் அவரின் சாபத்தை பெற வேண்டி இருக்கும். இது வாழ்க்கையில் துரதிர்ஷ்டத்தை கொடுக்கும். இதே போல் உணவை வேண்டாம் என ஒதுக்குவது தவறு. உணவை ஒதுக்குபவர்கள் வாழ்வில் பல கஷ்டங்கள், வறுமை ஆகியவற்றை சந்திப்பதுடன், பணத்திற்காகவும் திண்டாட வேண்டிய நிலை ஏற்படும்.

ஜோதிட சாஸ்திரப்படியும் சாப்பிட்ட தட்டில் கை கழுவுதல் உணவை அவமதிப்பதற்கு சமம். இதனால் செல்வத்திற்கு அதிபதியான லட்சுமி தேவியும், உணவுக்கு தெய்வமான அன்னபூரணியும் கோபம் கொண்டு சாபம் அளிப்பார்களாம். தட்டில் கை கழுவினால் நாம் சாப்பிட்ட உணவை மட்டுமல்ல, இனி சாப்பிட உள்ள உணவையும் அவமதிப்பதாகும்.

Read More : உங்கள் சொத்து ஆவணங்கள் தொலைந்து விட்டதா..? அப்படினா உடனே இந்த விஷயத்தை பண்ணுங்க..!!

Tags :
அன்னபூரனிஉணவுசாப்பாடுபுராணங்கள்ஜோதிடம்
Advertisement
Next Article