முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

15 ஆண்டுகளுக்கு பின்பு ராகு,புதன் சேர்க்கை.! இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படப்போகுது.!?

05:45 AM Feb 27, 2024 IST | 1newsnationuser5
Advertisement

பொதுவாக கிரகங்களில் ராகு கிரகம் கேடு ஏற்படுத்தும் கிரகமாக இருந்து வருகிறது. 18 மாதத்திற்கு ஒருமுறை இந்த ராகு கிரகம் இடப்பெயர்ச்சி செய்யும். கிரகங்களில் சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக இடபெயர்ச்சி செய்யும் கிரகம் ராகு தான். இந்த இடப்பெயர்ச்சி 12 ராசிக்காரர்களுக்கும் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.  ராகு கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து இந்த ஆண்டு முழுவதும் மீன ராசியில் பயணம் செய்து வருகிறார்.

Advertisement

மேலும் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் கிரகம், கல்வி, அறிவு, செல்வம், புத்தி கூர்மை போன்ற செல்வங்களுக்கு அதிபதியாக இருந்து வருகிறார். மிக குறைவான காலத்திலேயே இடப்பெயர்ச்சி செய்யும் புதன் கிரகம் மார்ச் மாதத்தில் இருந்து மீன ராசியில் ராகு கிரகத்துடன் சேர்க்கை செய்யவுள்ளார்.

12 ஆண்டுகளுக்குப் பிறகு ராகுவும், புதனும் இணையவுள்ளதால் 12 ராசிக்காரர்களுக்கும் தங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்களை உண்டாக்கும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் நன்மை, தீமை என இரண்டுமே அடங்கும். ஆனால் இந்த குறிப்பிட்ட மூன்று ராசியினருக்கும் புதன், ராகு சேர்க்கையால் பல அதிர்ஷ்டங்கள் ஏற்படப்போகிறது. அவை என்னென்ன ராசிகள் என்பதை குறித்து பார்க்கலாம்?

1. மிதுனம் - புதன், ராகு சேர்க்கையால் தொழில் மற்றும் வேலை விஷயத்தில் முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்து பிரச்சனை தீர்ந்து நல்ல பலன் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும்.
2. கடகராசி - வழக்கு விஷயத்தில் நல்ல தீர்வு கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
கும்பம் - இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் கடன் தொல்லைகள் தீரும். பணவரவு அதிகரிக்கும். புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். சுப காரியங்கள் நடக்கும். பொன், பொருள், ஆபரணம் அதிகரிக்கும்.

English summary: astrology news about ragu and pudhan displacement

Read more: காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இளநீர் குடிக்கலாமா.? மருத்துவர்களின் அறிவுரை என்ன.!?

Advertisement
Next Article