For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

புதன் இடப்பெயர்ச்சி.! இந்த 3 ராசியினருக்கும் இனி ராஜயோகம் தான்.!?

04:21 PM Feb 23, 2024 IST | 1newsnationuser5
புதன் இடப்பெயர்ச்சி   இந்த 3 ராசியினருக்கும் இனி ராஜயோகம் தான்
Advertisement

பொதுவாக நவகிரகங்களில் புதனை இளவரசனாக ஜோதிட சாஸ்திரத்தில் கருதப்பட்டு வருகிறது. புதன் கிரகம் சிந்தனை, புத்திசாலித்தனம் மற்றும் கல்வியின் அதிபதியாக கருதப்பட்டு வருகிறார். புதன் கிரகத்தின் அருள் எந்த ராசியினருக்கு கிடைக்குதோ, அவர்கள் நன்றாக சிந்திக்கும் திறன், வாதிடும் திறன், நன்றாக பேசும் திறன், அறிவுத்திறன் போன்றவை வரமாக கிடைக்கும்.

Advertisement

இத்தகைய செல்வங்களுக்கு அதிபதியாக உள்ள புதன், தற்போது கும்ப ராசியில் இடப்பெயர்ச்சி செய்துள்ளார். இதனால் குறிப்பிட்ட மூன்று ராசியினருக்கு ராஜ யோகம் கிடைக்கப் போகிறது. அவை என்னென்ன ராசிகள் என்பதை குறித்து இப்பதிவில் தெளிவாக பார்க்கலாம்?

1. மகரம் - கும்ப ராசியில் புதன் இடப்பெயர்ச்சி செய்துள்ளதால் மகர ராசியினருக்கு இனி வரும் காலம் எதிர்பார்த்தபடி நல்ல காலமாக அமையும். மேலும் எதிர்பாராத பணவரவு அதிகரிக்கும். கடன் தொல்லை குறைந்து தொழில் மற்றும் வேலை விஷயத்தில் சிறந்து விளங்குவீர்கள்.
2. மிதுனம் - புதனின் இடப்பெயர்ச்சி மிதுன ராசியினருக்கு பல சாதகமான முடிவுகளை கொண்டு வந்து சேர்க்கும். இனி நீங்கள் எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி பெற்று அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். வேலையில் பதவி உயர்வு, புதிய வேலை கிடைக்கும் வாய்ப்பு, தொழில் முயற்சி என அனைத்தும் வெற்றி பெறுவீர்கள்
மேஷம் - மேஷ ராசியினருக்கு புதன் கிரகத்தின் சஞ்சாரம் நன்றாக இருக்கும். எனவே வேலையில் செல்வாக்கு அதிகரிக்கும், முதலீட்டில் அதிக லாபம் பெறுவீர்கள், புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும், பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உண்டு, திடீர் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். இந்த மூன்று ராசியினருக்கும் புதன் கிரகம் சாதகமாக இருப்பதால் இனி வரும் காலங்களில் அதிர்ஷ்டத்தையும், ராஜ யோகத்தையும் பெறுவீர்கள்.

English summary : astrology zodiac signs

Read more : மாசி பௌர்ணமி வழிபாடு : அரசியல் அதிகாரம் பதவி உயர்வு கிடைக்க இந்த வழிபாடு பண்ணுங்கள்.!?

Advertisement