For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஒரு முகம் கொண்ட குத்துவிளக்கு., காமாட்சி விளக்கு., வீடுகளில் ஏற்றப்படும் விளக்குகள்.! என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா.!

09:10 PM Feb 04, 2024 IST | 1newsnationuser5
ஒரு முகம் கொண்ட குத்துவிளக்கு   காமாட்சி விளக்கு   வீடுகளில் ஏற்றப்படும் விளக்குகள்   என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா
Advertisement

பொதுவாக பலரும் வீடுகளிலும், கோயில்களிலும் விளக்கேற்றி கடவுளை பிரார்த்தனை செய்வது என்பது சிறப்பு வாய்ந்த விஷயமாக கருதி வருகின்றோம். பலரும் பரிகாரத்திற்காகவும், நெய் விளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்து வருகின்றனர். இவ்வாறு ஒவ்வொரு விளக்கு ஏற்றுவதற்கும் அதற்குரிய பலன்கள் என்ன என்பதை குறித்து இப்பதிவில் தெளிவாக பார்க்கலாம்.

Advertisement

நம் வீட்டு பூஜை அறையில் வைத்துள்ள குத்துவிளக்கில் பல வகைகள் இருக்கின்றன. அதில் ஒரு முகம் கொண்ட குத்துவிளக்கு ஏற்றும் போது வீட்டில் நன்மை உண்டாகும். இரு முகம் கொண்ட குத்து விளக்கு ஏற்றும் போது கணவன், மனைவி மகிழ்ச்சி பெருகி ஒற்றுமை அதிகமாகும். மூன்று முகம் கொண்ட குத்துவிளக்கு ஏற்றும் போது குழந்தையின்மை பிரச்சனை சரியாகி குடும்பம் விருத்தியாகும். நான்கு முகம் கொண்ட குத்து விளக்கு ஏற்றும் போது வீடு மனை வாங்கும் யோகம் கிடைக்கும். வீட்டில் உள்ள கால்நடைகள் பெருகும். ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கு ஏற்றும் போது அனைத்து விதமான செல்வங்களும் பெருகி சௌபாக்கியம் உண்டாகும்.

காமாட்சி விளக்கு என்பது அனைவரது வீட்டிலும் இருக்கும் விளக்கு ஆகும். மணப்பெண்ணுக்கு தன் தாயாரின் வீட்டிலிருந்து கொடுக்கப்படும் சீதனங்களில் காமாட்சி விளக்கும் ஒன்று. மணப்பெண் காமாட்சி விளக்கை தாயார் வீட்டில் இருந்து எடுத்து வரும்போது சகல செல்வங்களையும், லட்சுமி கடாட்சத்தையும் தன் புகுந்த வீட்டிற்கு சேர்க்கிறார்கள்.

மாவிளக்கு புரட்டாசி மாதத்தில் வரும் எல்லா சனிக்கிழமைகளிலும் மாவிளக்கு போடுவது சிறப்பான ஒன்றாக கருதப்பட்டு வருகிறது. இவ்வாறு பெண்கள் மாவிளக்கு போடும்போது அது குடும்பத்திற்கும் குலத்திற்கும் ஆரோக்கியத்தை ஏற்படுத்தும். பொதுவாக கோயில்களில் இந்த நெய் விளக்கு ஏற்றி வேண்டுவதை பார்த்திருப்போம் நெய் விளக்கு ஏடுகளில் ஏற்றக்கூடாது துன்பங்கள் விலகி மகிழ்ச்சி பெருகும் மன நிம்மதி அடையும். இவ்வாறு ஒவ்வொரு விளக்கு ஏற்றுவதற்கும் தனித்தனி பலன்கள் உண்டு என்று முன்னோர்கள் கூறி வருகின்றனர்.

Tags :
Advertisement