முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஆசியாவின் மிகப்பெரிய விமான கண்காட்சி!. இறைச்சிக் கடைகளை மூட அதிரடி உத்தரவு!. இரண்டிற்கும் என்ன தொடர்பு?

Asia's largest air show!. Action order to close meat shops!. What is the connection between the two?
07:44 AM Jan 19, 2025 IST | Kokila
Advertisement

Asia's largest air show: பெங்களூரில் அடுத்த மாதம் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றவுள்ளதால், இறைச்சிக் கடைகள் மற்றும் அசைவ ஹோட்டல்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

ஆசியாவின் மிகப்பெரிய 15வது விமானக் கண்காட்சியான ஏரோ இந்தியா 2025 சார்பில் கர்நாடகா மாநிலம் பெங்களூர்வின் புறநகரில் உள்ள யெலஹங்காவில் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடைபெற்றவுள்ளது. ஏரோ இந்தியா நடத்தும் இந்த கண்காட்சியை கருத்தில் கொண்டு, ஜனவரி 23ஆம் தேதி முதல் பிப்ரவரி 17ஆம் தேதி வரை இறைச்சிக் கடைகள் மற்றும் அசைவ ஹோட்டல்கள் மூட பெங்களூரு சிவில் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து வெளியான அறிவிப்பில், ஏரோ இந்தியா-2025 நிகழ்ச்சி யெலஹங்காவின் விமானப்படை நிலையத்தில் 10.02.2025 முதல் 14.02.2025 வரை நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, யெலஹங்கா விமானப்படை நிலையத்தில் இருந்து 13 கி.மீ தொலைவு வரை அசைவ உணவுகளை பரிமாறுவதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்படுகிறது. பொது இடங்களில் அசைவு உணவுகள் இருப்பதால் அதை உண்பதற்காக பறவைகள் வருகின்றன. நடுவானில் விபத்துக்களை ஏற்படுத்தும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Readmore: உச்சநீதிமன்றத்தில் புகுந்த மர்மநபர்!. 2 நீதிபதிகள் சுட்டுக்கொலை!. ஈரானில் பயங்கரம்!

Tags :
Asia's largest air showmeat shops closedOrder
Advertisement
Next Article