முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஜாம்பவான் ஷேன் வார்னின் சாதனையை சமன் செய்த அஸ்வின்!. தலை வணங்கிய கிங் கோலி!. வைரலாகும் வீடியோ!

WATCH: Virat Kohli bows down to R Ashwin after latter equals Shane Warne's record
07:43 AM Sep 23, 2024 IST | Kokila
Advertisement

Ashwin - Virat Kohli: டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய மறைந்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்னின் சாதனையை சமன் செய்த அஸ்வினுக்கு விராட் கோலி தலை வணங்கி வாழ்த்து தெரிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

டெஸ்ட், டி20 தொடா்களில் ஆடுவதற்காக வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறது. முதல் டெஸ்ட் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 376 ரன்களுக்கும், வங்கதேச அணி 149 ரன்களுக்கும் ஆல் அவுட்டாயின. முதல் இன்னிங்ஸில் இந்திய அணியில் அஸ்வின் 113, ரவீந்திர ஜடேஜா 86 ஆகியோா் அதிரடியாக ஆடினா். வங்கதேசத் தரப்பில் ஹாஸன் மஹ்முத் 5, டஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா். வங்கதேச அணியில் அதிகபட்சமாக ஷகிப் 32, லிட்டன் தாஸ் 22 ஆகியோா் மட்டுமே ஒரளவு ரன்களை எடுத்தனா். இந்திய தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

இதையடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்தியா இரண்டாவது நாள் ஸ்கோரான 81/3 ரன்களுடன் சனிக்கிழமை ஆட்டத்தை தொடா்ந்தது. கில் 33, பந்த் 12 ரன்களுடனும் ஆட்டத்தை தொடங்கினா். இளம் வீரா் ஷுப்மன் கில் அதிரடியாக ஆடி 4 சிக்ஸா், 10 பவுண்டரியுடன் 176 பந்துகளில் 119 ரன்களை விளாசி அவுட்டாகாமல் இருந்தாா். மறுமுனையில் அபாரமாக ஆடிய ரிஷப் பந்த் 4 சிக்ஸா், 13 பவுண்டரியுடன் 128 பந்துகளில் 109 ரன்களை விளாசி அவுட்டானாா். இருவரும் இணைந்து வங்கதேச ஸ்பின்னா்களை எளிதாக சமாளித்தனா். கில்-பந்த் சோ்ந்து நான்காவது விக்கெட்டுக்கு 167 ரன்களைச் சோ்த்தனா்.

கே.எல். ராகுல் 22 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தாா். வங்கதேசத் தரப்பில் மெஹ்தி ஹாஸன் மிராஸ் 2 விக்கெட்டுகளை சாய்த்தாா். 64 ஓவா்களில் 287/4 ரன்களை எடுத்திருந்த போது, இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சா்மா டிக்ளோ் செய்வதாக அறிவித்தாா். சென்னை டெஸ்டில் வெற்றி பெற வங்கதேச அணிக்கு 515 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை இந்தியா நிா்ணயித்தது. இந்தியா டிக்ளோ் செய்த நிலையில், தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடா்ந்த வங்கதேச அணி மூன்றாம் நாளான சனிக்கிழமை ஆட்டநேர முடிவில் 158/4 ரன்களை எடுத்திருந்தது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை வங்கதேசம் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடியது.

இருப்பினும் அந்த அணி வீரர்கள், ரவிச்சந்திரன் அஸ்வின், ஜடேஜா சுழலில் சிக்கி அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தனது சொந்த மண்ணில் அபாரமாக பந்துவீசிய அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வங்கேதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 234 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் இந்திய அணி சென்னை சேப்பாக்கம் டெஸ்ட் போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி, ஒன்றுக்கு பூஜ்யம் எனும் கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்தநிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக(5) விக்கெட்டுகளை வீழ்த்திய மறைந்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்னின் சாதனையை சமன் செய்த அஸ்வினுக்கு தலைவணங்கி, இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி மரியாதை அளித்தார். அஷ்வின் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு, மற்ற வீரர்கள் அவரை வாழ்த்த வந்தபோது, ​​​​கோலி அஷ்வினுக்கு குனிந்து வணங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக ஷேன் வார்ன், 2021 இல் சென்னையில் இங்கிலாந்துக்கு எதிராக 106 ரன்கள் மற்றும் 5/43 என்ற புள்ளிகளைப் பதிவுசெய்து (37வது முறை)சாதனை படைத்தார்.

Readmore: குட்நியூஸ்!. தினமும் 3 கப் காபி!. மாரடைப்பு, நீரிழிவு அபாயத்தை குறைக்கலாம்!. ஆய்வில் தகவல்!

Tags :
Ashwinequals Shane Warne's recordind vs banTest cricketvirat kohli
Advertisement
Next Article