இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்..!! பட்ஜெட்டில் என்னென்ன எதிர்பார்க்கலாம்?
2024 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் முக்கிய எதிர்பார்ப்புகள் என்னென்ன என்பது குறித்து விரிவாக காணலாம்.
இன்று தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின், முதல் நடவடிக்கையாக பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த அமர்வு ஆகஸ்ட் 12 வரை 19 அமர்வுகளைக் கொண்டிருக்கும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.
பீகார் மற்றும் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற சொந்த கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கைகளை ஆளும் அரசு எதிர்கொண்டுள்ள நிலையில், நீட் தேர்வுத்தாள் கசிவு வழக்கு மற்றும் ரயில்வே பாதுகாப்பு போன்ற பிரச்னைகள் தொடர்பாக அரசாங்கத்தை கேள்வி எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளன. இதனிடயே, பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்தும் நோக்கில், நேற்று டெல்லியில் நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
பட்ஜெட் எதிர்பார்ப்புகள் என்னென்ன?
மகாராஷ்டிரா, ஹரியாணா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப் பேரவைத் தேர்தல்கள் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு முழு பட்ஜெட்டில் பல்வேறு மாநிலங்களின் கோரிக்கைகளை உள்ளடக்கிய சமூக-பொருளாதாரம் சார்ந்த முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு, அதேபோல 80-சி' பிரிவின் கீழ் வழங்கப்படும் வருமான வரி விலக்கு ஆகியவை அதிகரிக்கப்பட வேண்டும் என்பது நடுத்தர மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
புதிய மசோதாக்கள் என்னென்ன?
பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா 90 ஆண்டுகள் பழைமையான வானூர்தி சட்டத்துக்கு மாற்றான சட்ட மசோதாநிதி மசோதா-2024காபி - விளம்பரப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதலுக்கான மசோதாரப்பர் தொழிலை மேம்படுத்தவும், ரப்பர் வாரியத்தின் செயல்பாட்டை நவீனப்படுத்தும் மசோதா உள்ளிட்ட 6 புதிய மசோதாக்கள் பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்த ப்படவுள்ளன. இதுமட்டுமல்லாமல் வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம்-1949, வங்கி நிறுவனங்கள் (கையகப்படுத்துதல், பொறுப்பு மாற்றம்) சட்டம் 1970 ஆகியவற்றில் திருத்தங்களும் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read more ; காலையில் வெறும் வயிற்றில் பால் குடிப்பவரா நீங்கள்..!! கட்டாயம் இத படிங்க..