பூத்து குலுங்கும் சூரியகாந்தி.. ரூ.25 இருந்தா போதும்.. அருமையான செல்ஃபி ஸ்பாட்..!! எங்கு இருக்கு தெரியுமா ?
தென்காசி மாவட்டத்தில் ஆயக்குடி, சாம்பர் வடகரை, சுந்தர பாண்டிய புரம் உள்ளிட்ட இடங்களில் சூரியகாந்தி பூக்கள் பூத்து குலுங்குகிறது. இதனை கான சுற்றுலா பயணிகள் கூட்டம் வந்து குவிகிறது. மேலும் இந்த சூரியகாந்தி பூக்களுடன் நின்று செல்பி எடுக்க ரூ 25 வசூலிக்கப்படுகிறது. தென்காசி மாவட்டத்தில் பல இடங்களில் சூரியகாந்தி பூக்களை ஆண்டுதோறும் விவசாயிகள் பயிரிடுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டும் சூரியகாந்தி மலர்களை பயிரிட்டுள்ளனர். அது தற்போது பூத்து குலுங்குகிறது. இது பார்ப்பதற்கு மஞ்சள் போர்வை போர்த்தியது போல் மிகவும் அழகாக இருக்கிறது. இந்த பூக்களை காண அண்டை மாநிலத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். அது போல் தென்காசியில் உள்ள குற்றால அருவிகள், காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ளிட்டவைகளை பார்வையிட வரும் போது சூரியகாந்தி மலர்கள் பூத்துக் குலுங்கும். இந்த அழகை பார்க்க ஆயக்குடி அருகே உள்ள கம்பளி பகுதியில் சுற்றுலா பயணிகள் முற்றுகையிடுகிறார்கள்.
கேரளாவிலிருந்து தென்காசிக்கு வருவோர் கார்களை நிறுத்திவிட்டு வயல்களில் பூத்து குலுங்கும் சூரியகாந்தி மலர்களை ரசிப்பதற்கு செல்லும் போது அவர்களிடம் வயல் உரிமையாளர்கள் செல்பி எடுக்க ஒருவருக்கு ரூ 25 வசூல் செய்கிறார்கள். பணம் செலுத்தி உள்ளே செல்லும் மக்கள் சூரியகாந்தி மலர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். இந்த பூக்களை கண்டால் செல்வம் பெருகுமாம். கேரளத்தை சேர்ந்த புதுமணத் தம்பதிகளும் இங்கு வந்து சூரியகாந்தி மலர்களை பார்த்துவிட்டு செல்கிறார்கள். இதனால் அந்த நெடுஞ்சாலையில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
Read more ; கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை.. அதிர்ச்சியில் இல்லதரசிகள்.. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?