தென் மாவட்ட இரயில்கள் இனி சென்னை வராது..!! ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
தென்மாவட்ட ரயில்கள் பெரும்பாலும் சென்னை எழும்பூர் அல்லது தாம்பரம் ரயில் நிலையம் வரை இயக்கப்படுகின்றன. இந்நிலையில், தாம்பரம் ரயில்பாதை பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், தென் மாவட்டத்தில் இருந்து சென்னை நோக்கி வரும் ரயில் சேவைகளில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஜூலை 22 முதல் அதாவது நாளை முதல் ஜூலை 31 வரை சென்னைக்கு வராது என்றும் செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய இடங்களில் நிறுத்தப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: நாகர்கோவில் -தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் ஜூலை 22 முதல் ஜூலை 31-ஆம் தேதி வரையும், மறுமார்க்கமாக ஜூலை 23 முதல் 31-ஆம் தேதி வரையும் முழுவதுமாக ரத்து செய்யப்படும்.
எழும்பூர் - மதுரை செல்லும் வைகை விரைவு ரயில், திருச்சி செல்லும் ராக்போர்ட் விரைவு ரயில், காரைக்குடி செல்லும் பல்லவன் விரைவு ரயில் ஜூலை 23 முதல் 31-ஆம் தேதி வரை செங்கல்பட்டு ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். தாம்பரம் -செங்கோட்டை செல்லும் விரைவு ரயில் ஜூலை 22, 24, 26, 27, 29, 31 தேதிகளில் விழுப்புரத்தில் இருந்து இயக்கப்படும். மறுமார்க்கமாக செங்கோட்டையில் இருந்து ஜூலை 24, 25, 28, 30 தேதிகளில் விழுப்புரத்தில் நிறுத்தப்படும்.
மங்களூர்-சென்னை எழும்பூர் விரைவு ரயில் ஜூலை 22 முதல் 31-ஆம் தேதி வரை திருச்சி வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கமாக ஜூலை 23 முதல் 31-ஆம் தேதி வரை திருச்சியில் இருந்து புறப்பட்டு மங்களூர் சென்றடையும். எழும்பூரில் இருந்து தாம்பரம் வழியாக சேலம் செல்லும் விரைவு ரயில் ஜூலை 23 முதல் 31-ஆம் தேதி வரை சென்னை கடற்கரை, அரக்கோணம், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும்.
Read more ; தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு நாளை தொடக்கம்..!!