For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

PM Modi | ”நான் இருக்கும் வரை இந்து மதத்தை அழிக்க விடமாட்டேன்”..!! பிரதமர் மோடி சூளுரை..!!

02:57 PM Mar 19, 2024 IST | 1newsnationuser6
pm modi   ”நான் இருக்கும் வரை இந்து மதத்தை அழிக்க விடமாட்டேன்”     பிரதமர் மோடி சூளுரை
Advertisement

இந்து தர்மத்திற்கு எதிராக இந்தியா கூட்டணி செயல்படுகிறது. இந்து மதத்தை பற்றி விமர்சிக்கும் இந்தியா கூட்டணி வேறு மதத்தையோ, மற்ற மதத்தையோ பற்றி விமர்சித்து பேசுவதே இல்லை என்று பிரதமர் மோடி பேசினார்.

Advertisement

சேலம் மாவட்டம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் இன்று பாஜக பொதுக்கூட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உறையாற்றினார். அப்போது, ”எதிர்க்கட்சிகளுக்கு அழிவு தொடங்கி இருக்கிறது. இந்து தர்மத்திற்கு எதிராக இந்தியா கூட்டணி செயல்படுகிறது. மற்ற மதத்தினரை இந்தியா கூட்டணி விமர்சிப்பதே இல்லை. இந்து மதத்தை பற்றி விமர்சிக்கும் இந்தியா கூட்டணி வேறு மதத்தையோ, மற்ற மதத்தையோ பற்றி விமர்சித்து பேசுவதே இல்லை.

இந்து மதத்தை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்துபோய் இருக்கிறார்கள். இந்து மக்களின் அடையாளத்தை நான் இருக்கும் வரை அழிக்க விடமாட்டேன். தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவதே எனது இலக்கு. சுப்பிரமணிய பாரதியார் போல நானும் பெண் சக்திக்காக போராடுவேன். திமுகவும் காங்கிரசும் பெண்களை எப்படியெல்லாம் இழிவுபடுத்தினார்கள் என்று நினைத்து பாருங்கள். சட்டசபையில் ஜெயலலிதாவை இழிவுபடுத்தியவர்கள் தான் திமுகவினர். இதற்காக தான் பெண்களுக்கான மகளிர் உரிமை சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் போது அதனை அவர்கள் எதிர்த்தனர்.

தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு கவலை அளிக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. திமுகவும் காங்கிரசும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள். ஊழல் செய்வதையே குறிக்கோளாக கொண்டுள்ளன. மத்திய அரசு அனுப்பும் பணத்தை கொள்ளையடிப்பதையை திமுக குறிக்கோளாக கொண்டுள்ளது. தமிழகத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பாஜக தொடங்கி வருகிறது. இந்தியா கூட்டணியில் புதிதாக இணைந்திருக்கும் அனைவருக்கும் நான் தலைவணங்குகிறேன். உங்கள் ஒவ்வொருவருடைய ஆதரவினால் நம் பாரதம் மேலும் வலுவடையும்.

தமிழ்நாடு மக்கள் ஒரு முடிவு செய்துவிட்டார்கள். ஏப்ரல் 19 ஆம் தேதி விழுகின்ற ஓட்டு எல்லாம் பாஜகவுக்கு தான்.. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான்.. தமிழக மக்களின் ஆதரவால் இந்த முறை பாஜக கூட்டணி 400 ஐ தாண்டும். 400 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெற வேண்டும். கோட்டை மாரியம்மன் மண்ணிற்கு வந்திருப்பது பெருமையளிக்கிறது. ராமதாஸ், அன்புமணியின் அனுபவம் பாஜகவுக்கு உதவியாக இருக்கும்” என்று கூறினார்.

Read More : பிரதமர் மோடியின் பேரணியில் பங்கேற்ற மாணவர்கள்..!! தனியார் பள்ளியின் மீது பாயும் நடவடிக்கை..!!

Advertisement