M.K.Stalin: தமிழகமே...! நாளை நடக்கும் முக்கிய நிகழ்வு... முதல்வர் ஸ்டாலின் எழுதிய அழைப்பு மடல்...!
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நினைவு இடம் நாளை திறக்கப்பட உள்ள நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தனது அழைப்பு மடலில்; தமிழ்நாட்டிற்கு ஒளி தந்த ஞாயிறான நம் கலைஞரின் ஓய்விடம், திங்கள் மாலையில் திறந்து வைக்கப்படும் நிகழ்வில், அவரின் உயிரினும் மேலான உடன்பிறப்புகளாம் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும். தலைமுறைகள் கடந்த தலைவரான நம் கலைஞர், தமிழ் அலைகளின் தாலாட்டில், தன் அண்ணனின் தலைமாட்டில் ஓய்வெடுக்கிறார்.
நம் நெஞ்சில் நிறைந்துவிட்ட தலைவர் கலைஞர் தன் மரணத்திலும் போராளியாக, சுயமரியாதை வீரராகச் சட்டப்போராட்டம் நடத்தி வெற்றியுடன் பெற்ற சென்னை மெரினா கடற்கரையில் அவருக்குரிய இடத்தில், அவரது நினைவிடம் கலைத்திறனுடன் உருவாகியிருக்கிறது. இந்தப் பணியை நிறைவேற்ற அல்லும் பகலும் உழைத்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு அவர்களின் அர்ப்பணிப்புமிக்க உழைப்பையும், அவருக்கு உறுதுணையாக இருந்த அரசு அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறையினரின் ஒத்துழைப்பையும் மறக்க முடியாது.
தமிழினத்தின் உயர்வுக்காக அயராது உழைத்த முத்தமிழறிஞர் கலைஞருக்காக இரவு - பகலாக உழைத்தும், தங்கத்தைப் போல இழைத்தும் கலைநயத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 26-ஆம் தேதி நடைபெறவுள்ள அதன் திறப்பு விழாவுக்கு உடன்பிறப்புகளாம் உங்களை, உங்களில் ஒருவனாக வரவேற்கக் கடமைப்பட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
English Summary : Artist Karunanidhi's memorial will be inaugurated tomorrow