முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அமலாக்கத்துறையால் கைது..? முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் கெஜ்ரிவால்..? அரசியலில் பரபரப்பு..!!

08:59 AM Dec 02, 2023 IST | 1newsnationuser6
Advertisement

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அவர், கைது செய்யப்பட்டால், டெல்லி அரசு ஒட்டு மொத்தமாக முடங்க வாய்ப்புள்ளது. இதற்கிடையே, முதல்வர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்வார் என்ற தகவல் பரவியுள்ளது.

இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமா என்ற கேள்வியை முன்வைத்து ஆம் ஆத்மி கட்சியினர் வீடு, வீடாகச் சென்று மக்களிடம் கருத்துக் கேட்டு வருகின்றனர். இதுகுறித்து டெல்லி அமைச்சர் கோபால் ராய் கூறுகையில், "முதல் நாளில் லட்சுமி நகர் தொகுதியில் வீடு வீடாகச் சென்று மக்களிடம் பேசினோம். இதுவரை, நாங்கள் பேசியவர்கள், கெஜ்ரிவால் பொதுமக்களுக்காக நிறைய பணிகளைச் செய்துள்ளார் என்று கூறுகிறார்கள்.

இலவச மின்சாரம், குடிநீர், மருத்துவம், கல்வி முதியோர் யாத்திரைக்கு வசதி செய்து கொடுத்த முதல்வர், பதவி விலகாமல் சிறையில் இருந்து ஆட்சியை நடத்த வேண்டும். சதித் திட்டத்தின் கீழ் இந்தக் கைதுகள் நடக்கின்றன என்றும் மக்கள் உறுதியாகக் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவர் பதவி விலகக் கூடாது. மக்களவை தேர்தலில் தோல்வி பயத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது" என்றார்.

Tags :
அமலாக்கத்துறைஅரவிந்த் கெஜ்ரிவால்டெல்லி முதல்வர்முதல்வர்
Advertisement
Next Article