Aadhar School : பெற்றோரின் வருமானச் சான்றிதழ் பள்ளிகளில் வழங்க ஏற்பாடு...! அமைச்சர் சூப்பர் அறிவிப்பு...!
Aadhar School : அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே ஆதார் பதிவு செய்யப்படும் என துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளிகளில் ஆதார் பதிவு செய்யும் திட்டம் துவங்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கான சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், பெற்றோரின் வருமானச் சான்றிதழ் ஆகியவையும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி; பள்ளி மாணவர்களுக்கான சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், அவர்களின் பெற்றோரின் வருமானச் சான்றிதழ் உள்ளிட்டவை வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாத காலத்தில் அதற்கான வசதிகள் பள்ளிகளிலேயே ஏற்படுத்தித் தரப்படும்.
பள்ளி மாணவர்களுக்கு ஆதார் வழங்கும் திட்டத்திற்காக எல்காட் மூலமாக 770 ஆதார் பதிவு மின்னணு கருவிகள் பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இதனால் அனைத்து பள்ளிகளிலும் பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் வரை புதிதாக பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை பதிவு செய்யாத மாணவர்களும் இத்திட்டத்தை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என்றார்.
English Summary: Arrangement for issuance of income certificate of parents in schools