இராணுவ வாகனம் 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!. 4 வீரர்கள் உயிரிழப்பு!. மோசமான வானிலையால் நிகழ்ந்த சோகம்!.
Army vehicle accident: ஜம்மு காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் 300 அடி பள்ளத்தாக்கில் இராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
ஜம்மு காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் நேற்று பிற்பகலில் ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு ராணுவ வாகனம் சென்று கொண்டிருந்தது. எஸ்கே பயேன் பகுதியில் அந்த வாகனம் வந்த போது, திடீரென சாலையில் இருந்து விலகி 300 அடி பள்ளத்தாக்கில் விழுந்தது. இதில், வாகனம் முற்றிலும் நொறுங்கி 4 வீரர்கள் சம்பவ இடத்திலேயே வீரமரணம் அடைந்தனர். 2 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து ராணுவம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘மோசமான வானிலை மற்றும் பனிமூட்டத்தால் தெளிவான பார்வை நிலை இல்லாத காரணத்தால் ராணுவ வாகனம் சாலையிலிருந்து விலகி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த துரதிஷ்டவசமாக சம்பவத்தில் துணிச்சல்மிக்க 3 வீரர்களை ராணுவம் இழந்துள்ளது. அவர்களின் குடும்பங்களுக்கு இதயப்பூர்வமான இரங்கலை தெரிவிக்கிறோம். காயமடைந்த வீரர்கள் உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக உதவி செய்த உள்ளூர் மக்களுக்கு ராணுவம் நன்றி தெரிவிக்கிறது’’ என கூறப்பட்டுள்ளது. இதே போல கடந்த மாதம் பூஞ்ச் மாவட்டத்தில் 300 அடி பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் விழுந்து 5 வீரர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.
Readmore: இதை மட்டும் செய்து பாருங்க.. உங்க பழைய பாத்ரூம் புதுசு போல் ஜொலிக்கும்..